நெருப்புடன் விளையாட வேண்டாம்! எரிந்து போவீங்க.. அதிரடிக்கு தயாராகிறாரா ஷேக் ஹசீனா.. பகிரங்க வார்னிங்
டாக்கா: வங்கதேசத்தில் இருந்து வெளியேறியுள்ள ஷேக் ஹசீனா, அந்நாட்டின் இடைக்கால தலைவர் முகம்மது யூனுசை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆதரவாளர்கள் மத்தியில் வீடியோ வாயிலாக பேசிய ஷேக் ஹசீனா, நெருப்புடன் விளையாட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் வங்கதேசம் கோரிக்கை விடுத்து வருகிறது.

எனினும், வங்கதேசத்தின் கோரிக்கைகளுக்கு இந்தியா இன்னும் செவி சாய்க்கவில்லை. வங்கதேசத்தில் தற்போது இடைக்கால தலைவராக முகம்மது யூனுஸ் உள்ளார். முகம்மது யூனுஸ் உயர் பதவிக்கு வந்ததில் இருந்து அண்டை நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். குறிப்பாக இந்தியாவுடனான இதுநாள் வரை வங்கதேசம் கடைபிடித்து வந்த நல்லுறவிலும் தற்போது விரிசல் போக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், முகம்மது யூனுசை கடுமையாக விமர்சித்து ஷேக் ஹசீனா பேசியுள்ளார். வங்கதேசத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஷேக் ஹசீனா கூறியதாவது:- தனது அதிகாரப்பசிக்காக வெளிநாட்டு சக்திகளுடன் கை கோர்த்து தேசத்தை வீழ்ச்சி அடைய வைத்துள்ளார். வங்கதேசத்தின் சுதந்திர போராட்டம் தொடர்பான அனைத்து சின்னங்களும் அகற்றப்பட்டுள்ளன.
சுதந்திர போராட்டாக்காரர்கள் இழிவு படுத்தப்பட்டுள்ளார்கள். சுதந்திர போராட்டக்காரர்களின் நினைவுக்காக அனைத்து மாவட்டங்களிலும் சுதந்திர போரட்டக்காரர்களுக்காக வளாகங்கள் கட்டுப்பட்டுள்ளன. ஆனால் அவைகள் எரிக்கப்பட்டுள்ளன. முகம்மது யூனுஸ் இதை நியாயப்படுத்துகிறாரா? நீங்கள் நெருப்புடன் விளையாடினால், அதை உங்களையும் சேர்த்து எரித்து விடும்.
அதிக அளவு கடன் வாங்கும் அந்த நபர், அதிகார பசி, பண பசி, வெளிநாட்டு பணத்தை வைத்து நாட்டை அளிக்கிறார். வங்கதேச தேசிய கட்சி மற்றும் ஜமாத் இ இஸ்லாமி கட்சியை சேர்ந்தவர்கள் அவாமி லீக் தலைவர்களை துன்புறுத்துகிறார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications