ஈராக்கில் தற்கொலைப்படைத் தாக்குதல்… 80 பேர் பலி
பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஈராக்கில் தொடர்ந்து வன்முறைகள் அரங்கேறி வரும் வேளையில் ஒரு காரில் வெடிகுண்டுகளை ஏற்றிக்கொண்டு வந்த தற்கொலை படை தீவிரவாதி அதனை வெடிக்கச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல் ஒரு உணவு விடுதியில் நிகழ்ந்த மற்றொரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் 35 பேர் கொல்லப்பட்டனர். 45 பேர் காயமடைந்தனர்.

சன்னி பிரிவினரின் எதிர்ப்பு போராட்டத்தில் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாக்குதல்கள் ஷியா பிரிவினர் இடத்தில் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த தாக்குதல்களுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
பாக்தாதின் பிற இடங்களில் காவல்துறையினரை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், பாதுகாப்பு படையினர் போல் உடையணிந்து வந்தும் தற்கொலைப் படை தாக்குதல்களை பயங்கரவாதிகள் அரங்கேற்றுவதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஈராக்கில் இந்த மாதத்தில் மட்டும் தாக்குதல் சம்பவங்களில், சுமார் 480 பேர் கொல்லப்பட்டிருப்பதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 5,200 பேர் வன்முறைச் சம்பவங்களுக்கு பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications