மலேசிய விமானம் கடலில் விழுந்ததையே ஆதாரங்கள் நிரூபிக்கின்றன: ஆஸ்திரேலிய பிரதமர் டோனி
பெர்த்: கிடைத்துள்ள ஆதாரங்கள் அனைத்தும் மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கியதையே உறுதி செய்கிறது என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி ஆபாட் தெரிவித்துள்ளார்.
கடந்த 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசிய விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. பின்னர் 2 வார தேடலுக்கு பிறகு விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசியா அறிவித்தது.
இதையடுத்து இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பாகங்கள்
இந்திய பெருங்கடலில் பொருட்கள் மிதப்பதை பல்வேறு நாட்டு செயற்கைக்கோள்கள் புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்தன. ஆனால் அவை விமானத்தின் பாகங்கள் இல்லை.

உறவினர்கள்
செயற்கைக்கோள் தகவலை வைத்து விமானம் கடலுக்குள் விழுந்ததாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஆஸ்திரேலியா
இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து பார்க்கையில் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் தான் எங்காவது காணாமல் போயிருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி ஆபாட் தெரிவித்துள்ளார்.

பெருங்கடல்
நாங்கள் குறைவான தகவல்களை வைத்துக் கொண்டு பெருங்கடலில் விமானத்தை தேடிக் கொண்டிருக்கிறோம். உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தை தேடும் பணியில் உதவி செய்கிறார்கள். நாங்கள் விமானத்தை இன்னும் சில காலம் தேடுவோம். அதே சமயம் இது ஒன்றும் எளிதான விஷயம் அல்ல என்று ஆபாட் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications