ஆப்கான்: தலிபான்கள் ஆட்சியில் பங்கு கேட்கிறது பாக். பயங்கரவாத அமைப்பு ஜெய்ஸ் இ முகமது
காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியில் பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஸ் இ முகமது இயக்கமும் பங்கு கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். தாலிபான்கள் முன்னேறிய போது ஆப்கான் அரசு படைகள் சரணடைந்தன.
பல்லாயிரக்கணக்கான ஆப்கான் ராணுவத்தினர் நாட்டைவிட்டே தப்பி ஓடிவிட்டனர். இதனால் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் மிக எளிதாக ஆட்சியைக் கைப்பற்றினர்.

தாலிபான்கள் கரிசனம்
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள், தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குகிறோம்; உலகின் எந்த நாட்டுடனும் எங்களுக்கு பகைமை இல்லை; பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும்; ஊடகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தனர்.

ஹக்கானி நெட்வொர்க்
தற்போதைய நிலையில் தாலிபான்கள் அமைப்பில் 2 முக்கிய பிரிவுகள் உள்ளன. அதில் ஒன்று ஹக்கானி நெட்வொர்க். சோவியத் படைகள் வெளியேறிய நிலையில் அதிபராக இருந்த ரப்பானியின் மகன் சிராஜூதின் ஹக்கானியின் தலைமையிலான பிரிவு இது. தாலிபான்கள் அமைப்பின் துணைத் தலைவராகவும் இருக்கிறார் சிராஜூதீனின் சகோதரர் ஹனாஸ் ஹக்கானி தலைமையிலான தாலிபான்கள் பிரிவு வசம் இருக்கிறது தலைநகர் காபூல்.

காபூல் பேச்சுவார்த்தை
ஹக்கானி நெட்வொர்க்கின் 6,000 தலிபான்கள் காபூல் நகரில் முகாமிட்டுள்ளனர். ஹனாஸ் ஹக்கானிதான் முன்னாள் அதிபர் அமித் கர்சாய் உள்ளிட்டோருடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். அமைதியான வழியில் ஆட்சி மாற்றம் தொடர்பாக இந்த பேச்சுவார்த்தைகளின் போது விவாதிக்கப்பட்டது. ஆப்கானில் தலிபான்களின் புதிய அதிபராக பாரதரிடம் பொறுப்பை ஒப்படைத்து குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஒற்றைக் கண் முல்லா ஒமர் மகன்
தாலிபான்களின் இன்னொரு பிரிவு முல்லா யாகூப் தலைமையிலானது. தாலிபான்களின் முன்னாள் தலைவரும் அமெரிக்கா தாக்குதலில் கொல்லப்பட்டவருமான ஒற்றைக் கண் முல்லா ஒமரின் மகன் இவர். கந்தகார் பகுதி தற்போது முல்லா யாகூப் தலைமையிலான தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தோகாவில் இருந்து நேற்று ஆப்கானிஸ்தான் வந்த பாரதரை முல்லா யாகூப் சந்தித்து ஆலோசனையும் நடத்தி இருக்கிறார்.
Recommended Video

பாக். ஜெய்ஸ் இ முகம்து
தற்போதைய தாலிபான்கள் தலைவரான அகுந்த்ஸாதா, பாகிஸ்தானின் கராச்சியில் முகாமிட்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஸ் இ முகமது அமைப்பு தாலிபான்களின் கூட்டணியில் உள்ள முக்கியமான இயக்கம். தெற்கு ஆப்கானிஸ்தானில் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாதிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ஆப்கான் படைகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அமெரிக்காவின் அதிநவீன ஆயுதங்களை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு வலம் வந்தவர்கள் இந்த பயங்கரவாதிகள்தான். இந்த இயக்கத்தின் தெற்கு ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதியை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று தாலிபான்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications