மலாலாவை துப்பாக்கியால் சுட்ட 10 தாலிபான் தீவிரவாதிகளுக்கும் ஆயுள் தண்டனை
இஸ்லாமாபாத்: பெண் கல்விக்காக குரல் கொடுத்ததற்காக பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்சாயை சுட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கைச் சேர்ந்த பள்ளி மாணவி மலாலா யூசப்சாய் பெண் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். கடந்த 2012ம் ஆண்டு மலாலா பள்ளி வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வாகனத்தை மறித்த தாலிபான் தீவிரவாதிகள் மலாலாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் தலையில் குண்டுபாய்ந்த மலாலா முதலில் பாகிஸ்தானிலும் பின்னர் இங்கிலாந்திலும் சிகிச்சை பெற்று குணமடைந்தார். பெண் கல்விக்காக குரல் கொடுத்த காரணத்திற்காக தாக்கப்பட்ட மலாலா அந்த சம்பவத்தை அடுத்து இங்கிலாந்தில் குடியேறினார்.
இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தானில் உள்ள தாலிபான் அமைப்பைச் சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து 10 தாலிபான் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
மலாலா தாக்குதல் பற்றிய வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. ஆனால் இந்த தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட அதாவுல்லா கான்(23) என்பவரின் பெயர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 10 பேர் கைதான விவரத்தை கடந்த செப்டம்பர் மாதம் தான் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. ஆனால் அவர்கள் எங்கு, எப்பொழுது கைது செய்யப்பட்டார்கள், அவர்கள் தான் தாக்குதலில் ஈடுபட்டவர்களா என்ற விவரத்தை தெரிவிக்க ராணுவம் மறுத்துவிட்டது.
தண்டனை விதிக்கப்பட்டோர் பட்டியலில் மலாலாவை தாக்கியதாக மக்கள் அடையாளம் காட்டியவர்களின் பெயர்கள் இல்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications