கொஞ்சம் மிஸ்ஸானாலும் திவால்! வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் எடுத்த முடிவு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பொருளாதாரம் இப்போது மிக மோசமான நிலையில் தடுமாறிக் கொண்டு இருக்கிறது. கொஞ்சம் மிஸ்ஸானாலும் திவால் ஆகிவிடுவோம் என்ற நிலையிலேயே பாகிஸ்தான் இருக்கும் நிலையில், தனது சொத்துகளை வரிசையாக விற்க ஆரம்பித்துள்ளது பாகிஸ்தான்.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
பாகிஸ்தான் நாட்டில் சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் மோசமாக இருக்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் அரசு தனது சொத்துகளை வரிசையாக விற்று வருகிறது. தனது தனியார்மயமாக்கல் திட்டத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவும், திவால் ஆவதை தவிர்க்கவும் பல முக்கிய அரசு நிறுவனங்களை விற்க ஆரம்பித்துள்ளது..

பாகிஸ்தான் எடுத்த முடிவு
அதில் முதற்கட்டமாகவே பல ஆண்டுகளாகக் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்து வந்த பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை பாகிஸ்தான் சமீபத்தில் விற்றிருந்தது. அடுத்த கட்டமாக மின் சப்ளை, பேங்கிங், விருந்தோம்பல், காப்பீடு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல அரசு நிறுவனங்களை இந்தாண்டு விற்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் அமைச்சரவை மீட்டிங் தொடர்பாக வெளியான ஆவணங்களில் இது உறுதியாகியுள்ளது.
பாகிஸ்தான் பொருளாதாரத்தைக் காக்கவும் திவால் நிலையைத் தவிர்க்கவும் இதுவே ஒரு ஆப்ஷன் என்கிறார்கள் பாகிஸ்தான் அதிகாரிகள். அதேநேரம் அங்குள்ள பொருளாதார வல்லுநர்கள் பாகிஸ்தான் அரசைக் கடுமையாகச் சாடுகிறார்கள். பல வருட நிர்வாகச் சீர்கேடுகளாலேயே பாகிஸ்தான் பொருளாதாரம் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அதை மறைக்கவே பாகிஸ்தான் தனது சொத்துக்களை விற்கிறது என்றும் சாடினார்.
நிலைமை மோசம்
பாகிஸ்தானைப் பொருத்தவரை அங்கு கடந்த சில ஆண்டுகளில் பொருளாதாரம் மோசமடைந்துவிட்டது. வெளிநாட்டுக் கடன் 131 பில்லியன் டாலர்களை தாண்டிவிட்டது. பொதுவாக எந்தவொரு நாடாக இருந்தாலும் கடன் வாங்கும். ஆனால், அவை வளர்ச்சித் திட்டங்களுக்காகவே இருக்கும். ஆனால், பாகிஸ்தான் இப்போது அன்றாடச் செலவுகளைச் சமாளிப்பதற்கே கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
பாகிஸ்தான் நிலைமை இந்தளவுக்கு மோசமாக இருப்பதால் அரசு தனது நிறுவனங்களை விற்றே தீர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. அப்படிச் சொத்துகளை விற்று மறுசீரமைப்பு மேற்கொள்ளவில்லை என்றால் இலங்கையைப் போல அங்கு ஒரு பெரிய பொருளாதாரக் குழப்பம் ஏற்படும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
அஜெண்டா-5
சில ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதாரத்தில் பாகிஸ்தான் தடுமாறிய நிலையில், அப்போது சொத்துகளை விற்று தனியார்மயமாக்கலை நோக்கிச் சென்றால் மட்டுமே உதவுவோம் என்பதைச் சர்வதேச நாணய நிதியம் ஒரு நிபந்தனையாகவே விதித்தது. அந்த நிபந்தனையைப் பூர்த்தி செய்யவே பாகிஸ்தான் தனது சொத்துகளை விற்க ஆரம்பித்துள்ளது. இதற்காக அடுத்த 12 மாதங்களுக்குள் விற்க வேண்டிய ஐந்து முக்கிய நிறுவனங்களின் பட்டியல் பாகிஸ்தான் உருவாக்கியுள்ளது. இதை "அஜெண்டா-5" திட்டம் என்று அழைக்கின்றனர்.
மின் விநியோக நிறுவனங்கள்
மின் திருட்டு, மின்சார இழப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாகிஸ்தான் அரசுக்குச் சொந்தமான மின் நிறுவனங்கள் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் இஸ்லாமாபாத், பைசலாபாத், குஜ்ரான்வாலா போன்ற நகரங்களில் மின்சார சப்ளையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வங்கித் துறை
ஃபர்ஸ்ட் விமன் வங்கி லிமிடெட் (FWBL) மற்றும் ஜராய் தரக்கியாட்டி வங்கி லிமிடெட் (ZTBL) ஆகியவையும் விற்பனை செய்யப்பட உள்ளன. அரசைக் காட்டிலும் தனியார் நிறுவனங்களை வங்கிகளை நடத்தச் சரியாக இருக்கும் என்பது அவர்கள் கருத்து!
ஹோட்டல் மற்றும் ரியல் எஸ்டேட்
நியூயார்க்கில் உள்ள பாகிஸ்தானுக்குச் சொந்தமான வரலாற்றுச் சிறப்புமிக்க ரூஸ்வெல்ட் ஹோட்டல் மற்றும் லாகூரில் உள்ள சர்வீசஸ் இன்டர்நேஷனல் ஹோட்டலை விற்கவும் பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் அந்நியச் செலாவணி கையிருப்புகளை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர ஜாம்ஷோரோ மற்றும் லாக்தா உள்ளிட்ட நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை மின் உற்பத்தி நிலையங்களை விற்றும் நிதிச் சுமையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல இன்சூரன்ஸ் துறையில் அரசு தனது செயல்பாடுகளைக் குறைக்க விரும்புவதால் அங்குள்ள அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெறும் இந்த விற்பனை நடைபெறுகிறது.
-
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
"ஈரானுக்கு ஆதரவு".. ஷியா இஸ்லாமியர்களை விரட்டியடிக்கும் பாகிஸ்தான்? ராணுவ தளபதியால் சர்ச்சை -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications