Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எப்படியாவது காப்பாத்துங்க.. பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கண்ணீருடன் கதறல்.. பிஎல்ஏ செய்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பலுச் லிபரேஷன் ஆர்மி என்ற பெயரில் செயல்பட்டு வரும் அமைப்பினர் 17 ராணுவ வீரர்களை சிறை பிடித்தனர். இதனை பாகிஸ்தான் மறுத்த நிலையில் அதுதொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் அந்த ராணுவ வீரர்கள் கண்ணீருடன் காப்பாத்தும்படி கதறுகின்றனர்.

ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் எல்லைகளை பகிர்ந்து வருகின்றன. தற்போது இருநாடுகள் இடையே பிரச்சனை உள்ளது. ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தாலிபான், பலுச் லிபரேஷன் ஆர்மி (BLA or Baloch Liberation Army) உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தை கதறவிட்டு வருகின்றனர்.

pakistan-afghanistan-conflict-pak-soldiers-crying-under-bla-custody-and-request-to-rescue-their-go

குறிப்பாக பலுச் லிபரேஷன் ஆர்மி பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக பிரிக்க வேண்டும் என்ற கோட்பாட்டில் உள்ளது. இந்த கோரிக்கையை முன்வைத்து பலுசிஸ்தான் மக்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றனர். அதற்கு ஆப்கானிஸ்தானில் இருந்து பலுச் லிபரேஷன் ஆர்மி ஆதரவு அளித்து வருகிறது.

மேலும் தனிநாடு கோரும் அமைப்பு, மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் எடுக்கும் நடவடிக்கையை கடுமையாக பலுச் லிபரேஷன் ஆர்மி எதிர்த்து வருகிறது. பாகிஸ்தானில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் பலுச் லிபரேஷன் ஆர்மியை பயங்கரவாத அமைப்பாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தான் பலுச் லிபரேஷன் ஆர்மியை சேர்ந்தவர்கள் 17 பாகிஸ்தான் ராணுவ வீரர்களை பிடித்து சென்றனர். அதில் 10 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் 7 பேரை சிறை வைத்தனர். இதனை பாகிஸ்தான் மறுத்தது. இந்நிலையில் தான் தங்கள் வசம் உள்ள 7 பாகிஸ்தான் ராணுவ வீரர்களை மண்டியிட வைத்து பலுச் லிபரேஷன் ஆர்மி அமைப்பினர் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் முழங்கால் இட்டு நிற்கின்றனர். அவர்களுக்கு பின்னால் துப்பாக்கி ஏந்தி பலுச் லிபரேஷன் ஆர்மி வீரர்கள் நிற்கின்றனர். அவர்கள் தங்களின் ராணுவ அடையா அட்டை மற்றும் பாகிஸ்தான் நாட்டின் அடையா அட்டைகளை வீடியோவில் காண்பித்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் என்பதை அவர்கள் உறுதி செய்தனர்.

அதிலும் ஒருவர், "நான் பாகிஸ்தானுக்காக போரிடுகிறேன். ஆனால் இன்று ராணுவம் என்னை தங்கள் சிப்பாய் என்று ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் பாகிஸ்தான் வீரர்கள் இல்லை என்று ராணுவம் எங்களை எப்படி மறுக்க முடியும்?'' என்று கண்ணீர்விட்டு கதறுகிறார்.

மேலும் அந்த ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவமும், பாகிஸ்தான் அரசும், பலுச் லிபரேஷன் ஆர்மியின் கைதிகள் பரிமாற்ற கோரிக்கையை ஏற்க வேண்டும். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி எங்களை காப்பாற்ற வேண்டும் கெஞ்சியுள்ளனர்.

இது பாகிஸ்தான் ராணுவத்தின் பலவீனத்தை காட்டும் வகையில் அமைந்துள்ளது. அதோடு பிப்ரவரி 22ம் தேதிக்குள் கைதிகள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் வர வேண்டும். இல்லாவிட்டால் பிடிப்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்படுவார்கள் என்று மிரட்டி உள்ளது.

அதாவது பலுச் லிபரேஷன் ஆர்மியை சேர்ந்த பலரை பாகிஸ்தான் பிடித்து சிறைப்படுத்தி உள்ளது. அதற்கு பதிலாக தற்போது பலுச் லிபரேஷன் ஆர்மியை சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை பிடித்து வைத்து கைதிகளாக உள்ள தங்களின் ஆதரவாளர்களை விடுவித்தால், இந்த ராணுவ வீரர்களை விடுவிப்போம். இல்லாவிட்டால் கொல்வோம் என்று மிரட்டி உள்ளனர். இருப்பினும் இந்த வீடியோ பற்றி பாகிஸ்தான் அரசோ, பாகிஸ்தான் ராணுவமோ இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+