இந்தியாவுக்கான புதிய தூதர் அப்துல் பாசித்: பாக். அறிவிப்பு
இஸ்லாமாபாத்: சல்மான் பஷீரின் பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கான புதிய பாகிஸ்தான் தூதராக அப்துல் பாசித் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக சல்மான் பஷீர் செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்கலாம் முடிவடையும் நிலையில் உள்ளது. எனவே, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக அப்துல் பாசித் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அப்துல் பாசித்தை,பாகிஸ்தானின் வெளியுறவு செயலாளராக நியமிக்கப் பட்டிருந்தார். இந்தியாவுக்கான புதிய தூதராக சையத் இபேன் அப்பாஸ் அறிவிக்கப்பட்டு இருந்தார். அதன்படி அப்துல் பாசித், பாகிஸ்தான் வெளியுறவு செயலாளராக கடந்த வாரம் பொறுப்பேற்க இருந்தார். ஆனால், திடீர் மாற்றமாக இந்தியாவுக்கான புதிய தூதராக அப்துல் பாசித் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், சையத் இபேன் அப்பாசை விட அனுபவம் மிக்கவர் என்பதால், அப்துல் பாசித்தை இந்திய தூதராக நியமித்துள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications