இந்திய கப்பல்களை துறைமுகத்திற்குள் விடக்கூடாது.. நடுங்கி கிடக்கும் பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், பாகிஸ்தான் கொடியுடன் வரும் கப்பல்கள் இந்திய துறைமுகத்தில் நுழைய தடை விதித்து இந்தியா அதிரடி நடவடிகை எடுத்தது. இதனால் பயந்துபோன பாகிஸ்தான் என்ன செய்வதென்று தெரியாமல் இந்திய கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகத்தில் நுழைய தடை விதித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக சதிவேலைகளில் நீண்ட காலமாக பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. பயங்கரவதிகளை தூண்டி விட்டு, இந்தியாவில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் பாகிஸ்தானுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதனால் விரக்தி அடைந்து இருக்கும் பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை ஏவி வருகிறது.

pakistan-bans-indian-ships-from-entering-its-ports

அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை

இந்த நிலையில், தான் கடந்த 22 ஆம் தேதி காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில், 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் கடும் கோபம் அடைந்த இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, இருநாடுகளுக்கும் இடையேயான தபால் சேவை ரத்து என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதேபோல வர்த்தக உறவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான வர்த்தகம் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலுக்குப்பின் மிகவும் குறைந்தது. கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி சுமார் ரூ.3,700 கோடி அளவிலும், பாகிஸ்தானில் இருந்து இந்தியா செய்த இறக்குமதி சுமார் ரூ.4.20 லட்சம் அளவிலும் இருந்தது. பாகிஸ்தானில் இருந்து பெரும்பாலும் பழங்கள், கொட்டைகள், எண்ணெய் வித்துகள் மற்றும் மூலிகை பொருட்கள் போன்றவையே இறக்குமதி செய்யப்பட்டன.

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து அனைத்து விதமான இறக்குமதிக்கும் தடை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டு உள்ளது. இதுதவிர பாகிஸ்தானின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தான் நேற்று கப்பல் போக்குவரத்து துறையின் டைரக்டர் ஜெனரல் அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டார்.

இந்திய கப்பல்கள் வர தடை

அதில் பாகிஸ்தான் கொடியுடன் வரும் கப்பல்கள் இந்திய துறைமுகத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகத்துக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஆடிப்போன பாகிஸ்தான், இந்திய கப்பல்கள் தங்கள் நாட்டிற்குள் வரக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- "இந்திய கொடியுடன் வரும் கப்பல்களை பாகிஸ்தானின் எந்த ஒரு துறைமுகத்திற்குள்ளும் அனுமதிக்க கூடாது. கடல்சார் இறையாண்மையை பாதுகாக்கவும், பொருளாதார நலன் மற்றும் தேசிய பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக இந்த நடவடிக்கை அமலுக்கு வருகிறது" என்று தெரிவித்துள்ளது.

இம்ரான் கான் டிவிட்டர் பக்கம் முடக்கம்

இப்படி இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் எக்ஸ் தள பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் எக்ஸ் தள கணக்கும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+