உக்ரைன் போருக்கு இடையே.. பாக் எல்லைக்குள் பாய்ந்த இந்திய ஏவுகணை?.. பாக் குற்றச்சாட்டு! என்ன நடந்தது?
இஸ்லாமாபாத்: இந்தியாவின் சூப்பர் சோனிக் ஏவுகணை ஒன்று திடீரென பாகிஸ்தான் எல்லைக்குள் வந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
உக்ரைன் ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துவிட்டன. மூன்று கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் தீவிரம் அடைந்துள்ளது. உக்ரைன் மீது இரண்டு வாரங்களுக்கு முன் ரஷ்யா போர் தொடுத்தது.
அதன்பின் கார்கிவ், கீவ, ஒடிசி உள்ளிட்ட பல்வேறு நகரங்களை குறி வைத்து உக்ரைன் தாக்கி வருகிறது. இதுவரை உக்ரைனில் 10 ஆயிரம் பொதுமக்கள், 11 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா பாகிஸ்தான்
இந்த போரில் இந்தியா - பாகிஸ்தான் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பாகிஸ்தான் ரஷ்யாவிற்கு வெளிப்படையாக ஆதரவு அளித்து வருகிறது. இந்தியா ரஷ்யாவை நேரடியாக ஆதரிக்கவில்லை என்றாலும் ஐநா உள்ளிட்ட பொது சபைகளில் ரஷ்யாவை எதிர்க்க இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இப்படி உக்ரைன் போர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில்தான் இந்தியாவின் சூப்பர் சோனிக் ஏவுகணை ஒன்று நேற்று முதல்நாள் பாகிஸ்தான் எல்லைக்குள் வந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சூப்பர் சோனிக் ஏவுகணை
அதன்படி இந்தியாவிற்கு சொந்தமான சூப்பர் சோனிக் ஏவுகணை 124 கிலோ தூரம் பாகிஸ்தான் எல்லைக்குள் புதன் கிழமை மாலை வந்தது. 40 ஆயிரம் அடி உயரத்தில் இந்த ஏவுகணை பறந்தது. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வான்வெளியில் இருந்த பயணிகள் விமானங்களுக்கு ஆபத்தான சூழ்நிலை நிலவியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்த விமானம் மீதும் இந்த ஏவுகணை மோதவில்லை.

பாகிஸ்தான் புகார்
இந்த ஏவுகணை பாகிஸ்தான் உள்ளே சிர்ஸா என்ற பகுதியில் விழுந்தது. ஆனால் இதில் குண்டுகள், ஆயுதங்கள் இல்லை என்பதால் சேதம் ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் ராணுவத்தின் Inter-Services Public Relations பிரிவின் இயக்குனர் பாபர் இப்திக்கார் பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், முதலில் அந்த ஏவுகணை இந்திய எல்லைக்குள் வேகமாக பறந்ததை பாகிஸ்தான் விமானப்படை ரேடார் கண்டுபிடித்தது.

வேகமாக வந்தது
அதனால் அதை துல்லியமாக கவனித்து வந்தோம். அது திடீரென பாகிஸ்தான் எல்லைக்குள் வந்தது. பாகிஸ்தான் வான்வெளி விதி, சர்வதேச விதிகளை மீறி இந்த ஏவுகணை இதனால் மக்கள் யாரும் பலியாகவில்லை. அதேபோல் பெரிய சேதம் ஏற்படவில்லை. இந்த ஏவுகணை விழுந்த இடத்தில் கட்டிடங்கள் இல்லை என்று அவர் கூறியுள்ளார். ஆனால் இந்திய பாதுகாப்புத்துறை இதைப்பற்றி இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

விமானப்படை
பாகிஸ்தான் விமானப்படை இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஏவுகணை 3 மேக் வேகத்தில் பறந்தது. பாகிஸ்தான் எல்லைக்குள் 124 கிலோ மீட்டர் வரை வந்தது. ஏவப்பட்ட நேரத்தில் இருந்து 6.46 நிமிடங்கள் இது பறந்துள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் 3.44 நிமிடங்கள் இது பறந்துள்ளது. இந்த ஏவுகணையின் பாகங்களை மீட்டு ஆராய்ச்சி செய்து வருகிறோம் என்று கூறியுள்ளது.
-
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications