பாகிஸ்தானில் கொடுமை! பலாத்காரம் செய்யப்பட்ட இந்து சிறுமியை குற்றவாளியுடன் செல்ல நீதிமன்றம் உத்தரவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்து பெண்ணை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த நபருக்கு எந்த தண்டனையும் வழங்காததோடு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளியுடன் செல்லுமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம் நாடான பாகிஸ்தானில் இந்து, சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய மதத்தினர் சிறுபான்மையினராக இருந்து வருகின்றனர். இதுபோன்ற சிறுபான்மை சமூகத்தினர் ஒருகாலத்தில் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வந்துள்ளனர்.
மத வழிபாடுகள் நடத்துவதற்கும், மதம் சார்ந்த சடங்குகளை செய்வதற்கும் பாகிஸ்தானில் கடும் கட்டுப்பாடுகள் இருந்து வந்தன. அதுமட்டுமின்றி அரசு வேலைவாய்ப்பு, நலத்திட்டங்கள் வழங்குதல் ஆகியவற்றிலும் சிறுபான்மை மதத்தினர் பாரபட்சமாகவே நடத்தப்பட்டனர். குறிப்பாக, இந்து மதத்தினர் இதுபோன்று பல அநீதிகளுக்கு உள்ளாகினர். இதுகுறித்து வெளியுலகுக்கு தெரியவந்து பல நாடுகளும் கண்டனம் தெரிவித்த பிறகே, ஓரளவுக்கு அங்கு சிறுபான்மை மதத்தினருக்கு உரிமைகள் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போது பாகிஸ்தானில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம், மீண்டும் அந்த நாடு பழைய நிலைக்கு சென்றுவிட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதுகுறித்து இங்கு காண்போம்.

மாயமான இந்து சிறுமி..
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் நகரைச் சேர்தவர் சண்டா மகாராஜ் (15). இந்து மதத்தைச் சேர்ந்தவரான இவர், அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே, கடந்த 13-ம் தேதியன்று மாலை திடீரென சிறுமி சண்டா மாயமானார். அவரை அவரது பெற்றோர்களும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர்கள் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இதனிடையே, 17-ம் தேதி கராச்சி நகரில் உள்ள ஒரு வீட்டில் அடைக்கப்பட்டு கிடந்த சண்டாவை போலீஸார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மதம் மாற்றி பலாத்காரம்
அப்போது அவர், தன்னை அதே பகுதியைச் சேர்ந்த ஷமான் மக்சி (26) என்பவர் கடத்திச் சென்று அவரது நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் தன்னை முஸ்லிம் மதத்துக்கு மாற்றியதாகவும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தனர். ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதியக் கூட போலீஸார் மறுத்துவிட்டனர்.

குற்றவாளியுடன் செல்ல உத்தரவு
இதன் தொடர்ச்சியாக, தனது மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி சண்டாவின் தந்தை, கராச்சி நகர நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனால் இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி, சிறுமியை கடத்திய நபரை கைது செய்யவோ, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் ஒரு வார்த்தை கூட கூறவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோருடன் செல்லக்கூடாது என்றும், அவரை பலாத்காரம் செய்து மதமாற்றம் செய்த இளைஞருடன் செல்ல வேண்டும் என உத்தரவிட்டார்.

கொந்தளிப்பு - தீர்ப்பு மாற்றம்
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, நீதிமன்றத்தில் இருந்த தனது பெற்றோரை கட்டிப்பிடித்து கதறி அழுதார். இந்த வீடியோவும், நீதிமன்ற தீர்ப்பும் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், பாகிஸ்தான் மட்டுமல்லாமல் இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் ஊடகங்களிலும் இந்த செய்திகள் வெளியாகி பல்வேறு விமர்சனங்களுக்கும் வித்திட்டது. இந்த விவகாரம் பூதாகரமாவதை உணர்ந்த கராச்சி நீதிமன்றம், இன்று அவசரமாக தனது தீர்ப்பை மாற்றியது. அதன்படி, சிறுமி சண்டா தனது பெற்றோருடன் செல்வதற்கு அனுமதி அளிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு எந்த தண்டனையையும் நீதிமன்றம் அறிவிக்கவில்லை.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications