முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்ய பாக்., கோர்ட் அதிரடி உத்தரவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மதகுரு கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது
பாகிஸ்தானில் மதகுரு கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

முஷாரப் அதிபராக இருந்தபோது 2007ம் ஆண்டு லால் மசூதிக்குள் ராணுவம் புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாடியது. இந்த மோதலில் மதகுரு அப்துல் ரஷீத் காஜி கொல்லப்பட்டார். இந்த படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைக்கு முஷாரப் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.
மேலும், தேசத்துரோக வழக்கு, கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை எதிர்நோக்கியுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற முஷாரப், கடந்த மார்ச் மாதம் துபாய் சென்றார்.
அதன்பின்னர் இதுவரையில் நாடு திரும்பவில்லை. அவர் மீதான வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி தொடர்ந்து சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனால் வழக்கு விசாரணையில் சுனக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முஷாரப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், அரசு நிர்வாகத்திற்கு உதவி செய்வதற்காக ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்காக, அவர்கள் மீதோ அதிகாரிகள் மீதோ வழக்கு பதிவு செய்ய முடியாது என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி நிராகரித்தார். அத்துடன், விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications