பாகிஸ்தானிலும் டிக் டாக் செயலிக்கு ஆப்பு... அநாகரிக வீடியோ வெளியிடுவதாக குற்றச்சாட்டு!!
இஸ்லாமாபாத்: சட்டத்திற்கு விரோதமான ஆன்லைன் செய்திகளை வெளியிட்டது, அநாகரிகமான வீடியோக்கள் வெளியிட்டது தொடர்பாக பாகிஸ்தானிலும் டக் டாக் செயலியை தடை செய்ய அந்த நாடு முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் ராய்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்து இருக்கும் பேட்டியில், ''தொடர்ந்து சட்டத்திற்கு விரோதமான மற்றும் அநாகரிகமான செய்திகளை, வீடியோக்களை வெளியிட வேண்டாம் என்று டிக் டாக் செயலிக்கு எச்சரிக்கை விடுத்து வந்தோம். ஆனால், அவர்கள் தொடர்ந்து நிராகரித்து வந்தனர். இதனால் தடை செய்ய முடிவு செய்து இருக்கிறோம்'' என்றார்.

இந்தியாவில் முதன் முறையாக இந்த செயலி தடை செய்யப்பட்டது. இதையடுத்து அமெரிக்காவும் தடை செய்ய முயற்சித்தது. அந்த நாட்டில் டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பது தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் பாகிஸ்தானிலும் தடை செய்ய அந்த நாடு முடிவு செய்து இருக்கிறது. இந்தத் தடை பாகிஸ்தானில் தற்காலிகமானதாக கூட இருக்கலாம்.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் இந்த செயலியின் புதிய பதிவிறக்கத்திற்கு தடை விதிக்க முயற்சித்தது. ஆனால், தற்போது வரும் நவம்பர் 12ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ட்ரம்ப்பின் முந்தைய தடைக்கு அந்த நாட்டின் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது.
ஆனால், இந்தியா கடந்த ஜூன் மாதம் டிக் டாக் செயலியை தடை செய்தது. மேலும் எல்லையில் பதற்றம் ஏற்பட்ட நிலையில், சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 58 செயலிகளை தடை செய்து இருந்தது. இந்தியாவில் மட்டும் இந்த செயலிக்கு 200 மில்லியன் பயனாளிகள் உள்ளனர்.
-
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications