இந்தியாவை மீண்டும் காப்பியடிக்கும் பாகிஸ்தான்.. பிலாவல் பூட்டோ குழு அனுப்ப போறாங்களாம்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மீதான தாக்குதல் குறித்து ஐக்கிய பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கு நேரில் சென்று விவரிக்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக அனைத்து கட்சிகளின் 7 பேர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவை போல பாகிஸ்தானும் வெளிநாடு சென்று தங்களது தரப்பு விளக்கத்தை அளிக்க வெளிநாடுகளுக்கு குழு அமைத்துள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாம்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் இந்தியா மீது டிரோன்கள் மூலமாக தாக்குதல் நடத்தியது.

pakistan-is-copying-india-again-they-are-going-to-send-a-team-of-bilawal-bhutto

மத்திய அரசு முடிவு

இதற்கு வட்டியும் முதலுமாக இந்தியா பதிலடி கொடுத்தது. இதையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்ததற்கான காரனம் குறித்தும் பாகிஸ்தானின் செயல்பாடுகளை அம்பலப்படுத்தவும் ஐக்கிய பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கு நேரில் சென்று விவரிக்க, மத்திய அரசு முடிவு செய்தது.

7 பேர் குழு

இதன்படி, அரசியல் பாகுபாடுகளை கடந்து, தெளிவாக குரல் எழுப்பக்கூடியவர்களை கவனமாக மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. அதன்படி, 7 அனைத்துக்கட்சி குழுக்களை முக்கிய நட்பு நாடுகளுக்கும், ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கிறது.

பாஜக எம்பிக்கள் ரவிசங்கர் பிரசாத், பைஜெயந்த் பாண்டா, காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. சஞ்சய் ஜா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) எம்.பி. சுப்ரியா சுலே, சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோர் ஒவ்வொரு குழுவுக்கும் தலைமை தாங்கி செல்வார்கள். இவர்களில் 4 பேர் தேசிய ஜனநாயக கூட்டணியையும், 3 பேர் 'இந்தியா' கூட்டணியையும் சேர்ந்தவர்கள்.

இந்தியாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்

ஒவ்வொரு குழுவும் 4 அல்லது 5 நாடுகளுக்கு செல்லும். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கி சொல்லும். சசி தரூர் தலைமையிலான குழு, அமெரிக்கா செல்கிறது. ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், அல்ஜீரியா ஆகிய நாடுகளுக்கு செல்லும் என்று தெரிகிறது.

சுப்ரியா சுலே தலைமையிலான குழு, ஓமன், கென்யா, தென்ஆப்பிரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளுக்கு செல்கிறது. சஞ்சய் ஜா தலைமையிலான குழு, ஜப்பான், சிங்கப்பூர், தென்கொரியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு செல்லும் என்று தெரிகிறது. இந்த நிலையில், இந்தியாவை இந்த விஷயத்திலும் பாகிஸ்தான் காப்பி அடித்துள்ளது.

ஷெபாஸ் ஷெரீப் பேச்சு

அதாவது, இந்தியாவை போல பாகிஸ்தானும் வெளிநாடு சென்று தங்களது தரப்பு விளக்கத்தை அளிக்க வெளிநாடுகளுக்கு குழு அமைத்துள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாம். இது குறித்து பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி கூறுகையில், "பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் என்னை தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசினார்.

தங்கள் தரப்பு கருத்தை சர்வதேச அரங்கில் எடுத்துரைக்கும் விதமாக குழுவை அனுப்ப உள்ளதாகவும் அதை வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சவாலான காலத்தில் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் நான் பெருமை அடைகிறேன்" என்று தெரிவித்துள்ளார். இந்தியாவை பின்பற்றியே பாகிஸ்தான் செயல்படுவது அந்த நாடு காப்பி அடிப்பதையே காட்டுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+