சீனத் தொழில்நுட்ப உதவியுடன் பாகிஸ்தானின் புதிய அணுமின்சக்தித் திட்டம் தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

கராச்சி: சீனத் தொழிற்நுட்ப உதவியுடன் கட்டப் படும் தனது நான்காவதும், நாட்டிலேயே மிகப் பெரியதுமான அணுசக்தித் திட்டத்தினை நேற்று துவங்கி வைத்தார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்.

மின் பற்றாக்குறையினால் பாகிஸ்தான் மிகவும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அதன் காரணமாக அங்கு உடைக் கட்டுப்பாடு உட்பட குளிர்சாதனப் பெட்டி, ஏசி போன்றவற்றைப் பயன் படுத்தத் தடை போன்ற பிரச்சினைகள் நிலவி வருகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தானின் மின் பற்றாக்குறையைக் களையும் நோக்கில் அந்நாட்டின் மிகப் பெரிய அணு சக்தித் திட்டத்தினை நேற்று துவக்கி வைத்துள்ளார் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்.

மிகப் பெரிய அணு உலை....

மிகப் பெரிய அணு உலை....

பாகிஸ்தானில் ஏற்கனவே மூன்று அணு மின் உலைகள் உள்ளன. அவர்றின் மூலம் 740 மெகாவாட் திறன் உற்பத்தி செய்யப் பட்டு வருகிறது. இந்நிலையில் தனது நான்காவது அணு மின் உலையைத் தொடங்க உள்ளது பாகிஸ்தான்.

பாரடைஸ் பீச்....

பாரடைஸ் பீச்....

இந்தப் புதிய அணு மின் உலை, பாகிஸ்தான் தலைநகர் கராச்சியிலிருந்து சுமார் 40கி.மீ தொலைவில் மேற்கில் அரேபியக் கடற்பகுதியில் பாரடைஸ் பீச் என்ற இடத்தில் அமைக்கப் பட்டுள்ளது.

சீனத் தொழில்நுட்பம்....

சீனத் தொழில்நுட்பம்....

சுமார் 2,200 மெகாவாட் திறன் கொண்ட இந்த அணுமின் உலை சீனத் தொழில்நுட்ப உதவியுடன் கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணுசக்தி ஆணையத்தின் பொறியாளர்கள் சீனா அணுசக்தி அதிகார உதவியுடன் இந்தத் திட்டத்தினை நிறைவேற்றுவார்கள்.

நம்பிக்கை....

நம்பிக்கை....

இந்தப் புதிய அணு உலையின் மூலம் பாகிஸ்தானின் மின்வெட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது.

லட்சியத்தின் முதல்படி...

லட்சியத்தின் முதல்படி...

புதிய அணு மின் உலையைத் தொடக்க விழாவில் பேசிய அந்நாட்டுப் பிரதமர் தெரிவித்துள்ளதாவது, ‘இத்தகைய பற்றாக்குறைகளை நீக்கும் லட்சியத்தின் முதல் படி இந்தத் திட்டம்' என்றார். மேலும், நாட்டின் ஆற்றல் உற்பத்தியை 40,000 மெகாவாட்டாக அதிகரிக்கும் தனது நீண்டகாலத்திட்டங்கள் குறித்தும் விழாவில் அவர் உறுதியளித்தார்.

10 பில்லியன் செலவில்....

10 பில்லியன் செலவில்....

இந்தப் புதிய திட்டத்திற்கு சுமார் 10 பில்லியன் செலவாகலாம் என உலக அணுசக்தி சங்கம் என மதிப்பிட்டுள்ளது.

சீனாவின் உதவி மட்டுமே....

சீனாவின் உதவி மட்டுமே....

பாகிஸ்தான் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் உறுப்பினர் இல்லை என்பதால் அந்நாடு அணுசக்திப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட முடியாது. அதனால், அவர்களுடைய அண்டை நாடான சீனாவின் உதவியை மட்டுமே அவர்கள் பெறமுடியும்.

சக்திப் பூங்கா....

சக்திப் பூங்கா....

இந்தப் புதிய அணுசக்தித் திட்டத்திற்கு அருகிலேயே பலுசிஸ்தான் மாகாணத்தின் கடாபி கடற்கரைப் பகுதியில் நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு 6,600 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய சக்தி பூங்கா எனப்படும் மின்திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+