ரூ.1240 கோடி இழப்பு.. அதுவும் இரண்டே மாதத்தில்.! இந்தியாவுக்கு பதிலடி தருவதாக வம்பில் மாட்டிய பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்தது. அப்போது பாகிஸ்தானும் பதிலடி கொடுக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு பல நடவடிக்கையை எடுத்தது. அப்படி எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையே பாகிஸ்தானுக்கு எதிராக போய்விட்டது. அதனால் பாகிஸ்தானுக்கு சுமார் ரூ.1,240 தோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் தாக்குதல் அரங்கேறியது. அதைத் தொடர்ந்து இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்தது. குறிப்பாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. இதை பாகிஸ்தான் சற்றும் எதிர்பார்ககவி்லை. இதையடுத்து இந்சியாவுக்கு பதிலடி கொடுக்கிறோம் என சொல்லி பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியது.

ரூ.1240 இழப்பு
அதாவது இந்தியா பதிவுசெய்த விமானங்கள் பாகிஸ்தானில் பறக்க முடியாது என்பதே அவர்களின் அறிவிப்பு. இருப்பினும், இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடியதால் பாகிஸ்தான் கடும் நிதி இழப்புகளை சந்தித்துள்ளது. பாகிஸ்தான் விமான நிலைய ஆணையத்திற்கு இதனால் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் ₹1,240 கோடி (PKR 4.1 பில்லியன்) வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான்
ஏப்ரல் 24ம் தேதி நடைமுறைக்கு வந்த இந்தத் தடையால், தங்கள் நாடு வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா முகமது ஆசிஃப் கூறியிருக்கிறார். இந்திய நிறுவனங்களுக்குச் சொந்தமான அல்லது இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து விமானங்களுக்கும் பாகிஸ்தான் தனது வான்வெளியை முடக்கியுள்ளது.
பொதுவாக ஒரு நாட்டின் மீது குறிப்பிட்ட விமானம் பறக்கும்போது அதற்கான கட்டணத்தை தர வேண்டும். அதாவது நமது நாட்டின் விமானம் ஒன்று இலங்கை வான்வெளியில் பறந்தால் அந்நாட்டு கட்டணம் தர வேண்டும். ஆனால், இந்திய விமானங்களுக்கு அனுமதி தரப்போவதில்லை என்ற முடிவை பாகிஸ்தான் எடுத்ததால் கடந்த ஏப்ரல் 24 முதல் ஜூன் 30 வரையிலான காலத்தில் பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் மிக பெரிய இழப்பை சந்தித்துள்ளது.
பெரிய சிக்கல் தான்
நாளொன்றுக்கு 100 முதல் 150 இந்திய விமானங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை பாகிஸ்தான் இழந்தது. இதனால் பாகிஸ்தானின் வான்வெளியில் பறக்கும் விமானங்களின் எண்ணிக்கையும் 20% வரை குறைந்துள்ளாதாக கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் விமான ஆணையம் ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், இந்த ரூ.1,240 கோடி பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு பாதிப்பில்லை
இருப்பினும், பாகிஸ்தான் அமைதியாக இருப்பது போல தெரியவில்லை. இந்திய விமானங்களுக்கான வான்வெளி மூடலை ஆகஸ்ட் 24 வரை நீடித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "இந்தத் தடை ஆகஸ்ட் 24 அன்று அதிகாலை 4.59 மணி வரை தொடரும். இந்தியப் பதிவு செய்யப்பட்ட விமானங்கள் மற்றும் இந்திய விமான நிறுவனங்களுக்கு சொந்தமான, இயக்கப்படும் அல்லது குத்தகைக்கு விடப்பட்ட விமானங்கள் மற்றும் ராணுவ விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த முடியாது" என்று கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த தடையால் இந்திய விமான நிறுவனங்களின் சர்வதேச விமான போக்குவரத்து எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. மாற்று பாதையில் இந்திய விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டே வருகிறது.












Click it and Unblock the Notifications