போதையில் பாகிஸ்தான் அமைச்சர் செய்த காரியம்? மிக பெரிய போர் வெடித்திருக்கும்.. அலட்சியத்தின் உச்சம்
இஸ்லாமாபாத்: அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை இன்று நடக்கும் சூழலில், பாகிஸ்தான் அமைச்சர் போட்ட ஒரு போஸ்ட் சர்வதேச அளவில் அவர்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.. இதற்கிடையே இஸ்ரேலை எனச் சாடி பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் அந்த போஸ்ட்டை போட்ட போது அவர் மதுபோதையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
வளைகுடா மோதல் ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்தது. அமெரிக்காவில் இந்த போருக்கு எதிர்ப்புகள் அதிகரித்த சூழலில், டிரம்ப் போரை நிறுத்த பிரஷர் போட்டார். ஈரானும் இதற்கு ஒப்புக்கொண்டது. முதற்கட்டமாக 15 நாட்களுக்குப் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு இறுதிப் போர் நிறுத்த ஒப்பந்தம் போடுவதே திட்டமாகும்!

பேச்சுவார்த்தை
இந்த விவகாரத்தில் அமெரிக்கா ஈரான் இடையே பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இன்று இந்த அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குகிறது. இந்தச் சூழலில், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தனது 'X' தளத்தில் இஸ்ரேலுக்கு எதிராக நேற்று பதிவிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது..
எரிமலையாய் வெடித்த போஸ்ட்
அதாவது லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைக் கண்டித்துப் பதிவிட்ட கவாஜா ஆசிப், "இஸ்ரேல் ஒரு தீய சக்தி மற்றும் மனிதக்குலத்திற்குப் பிடித்துள்ள சாபம்" எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், "ஐரோப்பிய யூதர்களை வெளியேற்றுவதற்காகப் பாலஸ்தீன மண்ணில் இந்த நச்சுத்தன்மை வாய்ந்த நாட்டை உருவாக்கியவர்கள் நரகத்தில் எரிவார்கள்" என மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார்.
இந்த விவகாரம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரை போனது. அவரது அலுவலகம் உடனடியாக இதற்குப் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் விமர்சித்த இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், "அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தும் ஒரு நாட்டின் அமைச்சரே, இஸ்ரேலை அடியோடு அழிக்க வேண்டும் எனப் பேசுவது அநாகரிகமானது.. இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது" எனக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
டெலிட்
இஸ்ரேலின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, கவாஜா ஆசிப் தனது பதிவை அவசர அவசரமாக நீக்கினார். ஆனால் அதற்குள் அந்தப் பதிவு ஸ்கிரீன்ஷாட்களாகப் பகிரப்பட்டுவிட்டது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பீல்ட் மார்ஷல் முனீர் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். அவர் ஆசீப்பை தொடர்பு கொண்டு திட்டியதாகவும் சொல்லப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சரை ஒரு பீல்ட் மார்ஷல் தொடர்பு கொண்டு அதிருப்தியை வெளிப்படும் அளவுக்குத் தான் அங்கு அரசின் பலம் உள்ளது என்பது தனிக்கதை!
மதுபோதை
இதற்கிடையே பிரபல அரசியல் விமர்சகர் மரியோ நாவ்பல் உள்ளிட்ட பலரும், "ஒரு அணு ஆயுத பலம் கொண்ட நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர், போதையில் இருந்து கொண்டு இப்படிப் பதிவிட்டாரா அல்லது வேண்டுமென்றே விளம்பரத்திற்காக இதைச் செய்தாரா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தும் ஒரு நாடு, நடுநிலையோடு நடக்க வேண்டாமா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.
இந்தச் சர்ச்சை ஒருபுறம் இருக்க, மறுபுறம் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான குழுவும், ஈரான் பிரதிநிதிகளும் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளனர்.. இரு தரப்பினரும் ஒரே அறையில் அமராமல், வெவ்வேறு அறைகளில் இருந்து கொண்டு பாகிஸ்தான் அதிகாரிகள் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் 'ஷட்டில் மெடியேஷன்' (Shuttle Mediation) முறையில் இந்தப் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது..
-
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
உச்சக்கட்ட பரபரப்பில் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்க தலைகள் லிஸ்ட் ரெடி.. யாரெல்லாம் வராங்க? -
லெபனான்-க்கு விடிவுகாலம்? டிரம்ப் செய்த போன் கால்.. இஸ்ரேல் நெதன்யாகு முக்கிய முடிவு! -
ஈரான் உச்சகட்ட வார்னிங்.. ஹார்முஸ் முழுக்க கண்ணிவெடி வச்சிருக்கோம்.. அந்த பக்கம் போகாதீங்க! -
அடங்க மறுக்கும் ஈரான்.. விடாமல் விரட்டும் ட்ரம்ப்.. ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் வெடிக்கும் போர்? -
ஈரான் ஆடிய ஆட்டம்.. சவுதி அரேபியாவின் மோசமான நிலை.. போர் முடிந்த பின் வெளியான உண்மை! -
போர் நிறுத்தத்திற்கு காரணம் பாகிஸ்தானா? வெளியான முக்கிய தகவல்.. உள்ளே புகுந்து விளையாடிய சீனா! -
பறந்த 26 போன் கால்கள்.. பாகிஸ்தான் வெறும் 'முகமூடி' தான்.. அமெரிக்கா- ஈரான் போரில் சீனா ஆடிய கேம் -
அமெரிக்கா - ஈரான் மீட்டிங்: மீடியேட்டராக இருக்கும் பாகிஸ்தானுக்கு என்ன லாபம்..? பெரிய லிஸ்ட் இருக்கு -
எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் நெதன்யாகு.. லெபனானை தொடர்ந்து தாக்குவோம் என இஸ்ரேல் திட்டவட்டம் -
வளைகுடா நாடுகளில் அமைதி.. இந்தியர்களுக்கு பெரிய நிம்மதி! ஈரான் எடுத்த நடவடிக்கை! -
லெபனானில் அமைதி திரும்பும் வரை பேச்சுவார்த்தை கிடையாது.. டிரம்பை சாய்த்த ஈரான்.. மிரண்ட பாகிஸ்தான் -
ஒப்பந்தம் ஏற்படாமல் போகட்டு, அப்புறம் இருக்கு.. பேச்சுவார்த்தைக்கு முன்பே ஈரானை மிரட்டும் அமெரிக்கா













Click it and Unblock the Notifications