பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: எதிர்கட்சி எம்.பி. படுகாயம், கார் டிரைவர் பலி
கராச்சி: பாகிஸ்தானில் எதிர்கட்சி எம்.பி. ராஷித் கோத்லி மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தில் அவரின் கார் டிரைவர் பலியானார்.
பாகிஸ்தானில் உள்ள முத்தாஹிதா குவாமி இயக்க கட்சியைச் சேர்ந்த எம்.பி. ராஷித் கோத்லி செவ்வாய்க்கிழமை கராச்சி நகரில் காரில் சென்று கொண்டிருந்தார். டிராபிக்கில் அவரது கார் நின்று கொண்டிருக்கையில் அங்கு இரண்டு பைக்குகளில் வந்த 4 மர்ம நபர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதில் கோத்லியின் கார் டிரைவர் பலியானார். கோத்லியின் தலை, தாடை, மார்பு ஆகிய பகுதிகளில் 5 குண்டுகள் பாய்ந்தன. படுகாயம் அடைந்த கோத்லி லியாகத் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடுத்த 48 மணிநேரத்திற்கு அவரது நிலை பற்றி எதுவும் கூற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கராச்சி அரசியலில் முக்கிய பங்காற்றி வரும் முத்தாஹிதா கட்சியினர் தாங்கள் ஒதுக்கப்படுவதாகக் கூறி நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்வதாக கடந்த வாரம் கடிதம் அளித்தனர். அவர்களின் ராஜினாமாவை பிரதமர் நவாஸ் ஷரீப் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.
கராச்சி நகரில் சக்திவாய்ந்தவர்களாக உள்ள முத்தாஹிதா கட்சியினர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications