பாகிஸ்தானின் அணு ஆயுத அமைப்புடன் இம்ரான் கான் திடீர் ஆலோசனை
இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் போர் பதட்டம் உருவாகியுள்ள சூழ்நிலையில், அணு ஆயுத விவகாரங்களில் முடிவெடுக்கக்கூடிய அமைப்பின் நிர்வாகிகளுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திடீர் ஆலோசனை நடத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புல்வாமாவில் இந்திய சிஆர்பிஎப் படை வீரர்கள் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில், 40 பேர் பலியாகினர்.

இதையடுத்து நேற்று அதிகாலை, பாகிஸ்தான் வான் எல்லைக்குள் புகுந்து இந்திய போர் விமானங்கள் தீவிரவாதிகளின் முகாம்களை குண்டு வீசி அழித்துவிட்டு திரும்பியுள்ளன.
இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் இரு நாட்டு எல்லைப் பகுதியில் போர் விமானங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடுமையான பதற்றமான சூழ்நிலை எழுந்துள்ள நிலையில் இம்ரான்கான் இன்று அந்த நாட்டின் அணுஆயுத விவகாரங்களுக்கான முடிவெடுக்கும் உயர் கமிட்டி உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த கூட்டத்தில் அணுஆயுத பயன்பாடு குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் இந்திய தரப்பை அச்சுறுத்துவதற்காக இவ்வாறு ஒரு கூட்டத்தை கூட்டி இருக்கக்கூடும் என்று இந்திய பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
சர்வதேச சமூகத்தில் தனித்து விடப்பட்ட பாகிஸ்தான், இந்தியாவை எதிர்த்து போர் செய்வது என்பது இயலாத காரியம். இருப்பினும் இந்திய அரசை பீதிக்குள்ளாக்கும் நோக்கத்திலும், பாகிஸ்தான் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நோக்கத்திலும் இவ்வாறு ஒரு கூட்டத்தைக் கூட்டி இருக்கலாம் என்கிறார்கள்.
அதேநேரம், அடிபட்ட வேகத்தில் இருக்கும் பாகிஸ்தான் வெறியோடு இருப்பதால், அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது என்றும் எச்சரிக்கிறார்கள்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications