‛அரபு நேட்டோ’.. இனி பாகிஸ்தானை சீண்டினால் மொத்த இஸ்லாமிய நாடுகளும் வரும்.. இந்தியாவுக்கு பேராபத்து

Subscribe to Oneindia Tamil

தோஹா: அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை போல் ‛நேட்டோ' படையை அமைத்துள்ளன. இதனால் ‛நேட்டோ' நாடுகள் தாக்குதலுக்கு உள்ளாவது இல்லை. அதேபோல் மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து நேட்டோ போன்ற படையை உருவாக்க திட்டமிட்டுள்ளன. இதற்கான ஆலோசனை கூட்டம் கத்தாரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பாகிஸ்தான் பங்கேற்றது. இது நம் நாட்டுக்கான வார்னிங் செய்தியாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி வரும்காலத்தில் பாகிஸ்தானை தாக்கினால் அரபு மற்றும் மொத்த இஸ்லாமிய நாடுகளையும் நம்மை திருப்பி தாக்கும் சூழல் வரலாம் என்ற ஷாக் தகவல்வெளியாகி உள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மொத்தம் 16 நாடுகள் உள்ளன. 15 நாடுகள் இஸ்லாமிய அரபு நாடுகள். சவுதி அரேபியா, ஈராக், ஈரான், துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, ஜோர்டான், சிரியா, ஏமன், லெபனான், இஸ்ரேல், பாலஸ்தீனம், ஓமன், கத்தார், குவைத், பக்ரைன் உள்ளிட்ட நாடுகள் மத்திய கிழக்கு நாடுகளாக உள்ளன. இஸ்ரேல் மட்டும் யூத நாடாக உள்ளது.

nato arab nato pakistan

இஸ்ரேலுக்கும் அதனை சுற்றி இருக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை நிலவி வருகிறது. இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசாவில் போர் புரிந்து வருகிறது. அதுமட்டுமின்றி லெபனான், ஈரானை தொடர்ந்து கத்தார் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

கடந்த வாரம் கத்தார் தலைநகர் தோஹாவில் சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் தனது போர் விமானங்கள் மூலமாக அதிரடி தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் அமைப்பை சேர்ந்த தலைவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகளிடம் ஒற்றுமை கிடையாது. இதனால் இஸ்ரேல் தனி ஆளாக அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் தான் இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்று சேர தொடங்கி உள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து ‛நேட்டோ' படையை உருவாக்கியதுபோல் ‛அரபு நேட்டோ' எனும் படையை உருவாக்க திட்டமிட்டன. இந்நிலையில் தான் கத்தார் தலைநகர் தோஹாவில் அரபு - இஸ்லாமிய நாடுகளின் அவசர கூட்டம் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் மொத்தம் 40 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், பஹ்ரைன், பாகிஸ்தான், துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளும் அடங்கும். பாகிஸ்தான் சார்பில் அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் எகிப்து சார்பில் ‛அரபு நேட்டோ' படை உருவாக்குவது பற்றிய முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. அதன்பிறகு விவாதம் தொடங்கியது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நேட்டோ படையை அமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் சார்பில் ‛அரபு நேட்டோ' படை அமைப்பது மட்டுமின்றி பிராந்தியத்தில் இஸ்ரேலின் செயல்பாட்டை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அந்த நாட்டின் பிரதமர்ஷெபாஸ் ஷெரீப் கூறினார். அதேபோல் துருக்கி அதிபர் தையிப் எர்டோகன், இஸ்ரேலுக்கு எதிராக பொருளாதார முடக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.

ஈராக் பிரதமர் முகமது அல் சுடானி நேட்டோ பாணி கூட்டுப் பாதுகாப்பு கட்டமைப்பிற்கு ஆதரவாக பேசினார். இதுபற்றி அவர், ‛‛எந்தவொரு அரபு அல்லது இஸ்லாமிய நாட்டின் பாதுகாப்பும் ஸ்திரத்தன்மையும் நமது கூட்டுப் பாதுகாப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும். இதற்கு இத்தகைய படை அமைக்க வேண்டும்'' என்று கூறினார்.

சவுதி அரேபியா சார்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த திட்டம் வகுக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு ராணுவ படையை உருவாக்கும் சவுதி அரேபியாவின் திட்டம் கைகூடவில்லை. இப்போது மீண்டும் அந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமிய நாடுகளை எடுத்து கொண்டால் பெரிய ராணுவ பலத்தை கொண்ட நாடாக எகிப்து உள்ளது. பல ஆயுதங்களை கைவசம் வைத்துள்ளது. அதேபோல் அணுஆயுதம் கொண்ட ஒரே நாடாக பாகிஸ்தான் உள்ளது. இதனால் இருநாடுகளும் முக்கிய பங்காற்ற உள்ளன.

அரபு - இஸ்லாமிய நாடுகளின் இந்த திட்டம் இஸ்ரேலுக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கு பெரிய பிரச்சனையாக மாறலாம். ஏனென்றால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உருவாக்கிய நேட்டோ படையில் மொத்தம் 32 நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் ஏதேனும் ஒன்றை தாக்கினாலும் பிற நாடுகள் அனைத்தும் சேர்ந்து தாக்குதல்நடத்தும். பொருளாதாரம் மற்றும் ஆயுத உதவிகளை செய்யும். அப்படி பார்த்தால் இதில் பாகிஸ்தான் பங்கேற்றுள்ளது. பாகிஸ்தானிடம் மட்டுமே அணுஆயுதம் உள்ளதால் அந்த நாடு ‛அரபு நேட்டோ' அமைப்புக்கு கூடுதல் பலமாகும்.

அப்படியென்றால் இனி நாம் பாகிஸ்தானை தாக்கும்போது அரபு - இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தலாம். இதனால் பாகிஸ்தானை இணைத்து கொண்டு இந்த ‛அரபு நேட்டோ' படை அமைந்தால் இஸ்ரேல் மட்டுமின்றி இந்தியாவுக்கும் சிக்கல் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+