சீக்ரெட் மீட்டிங்! நேபாளத்தில் மோடியை "அவர்" ரகசியமாக சந்தித்தார்.. இம்ரான் கான் பரபர குற்றச்சாட்டு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இந்தியப் பிரதமர் மோடி குறித்து சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக மோசமான பொருளாதாரம் நிலவி வரும் நிலையில், அதை இம்ரான் கானால் சமாளிக்க முடியவில்லை. இதனால் அவர் மீதான அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பிரதமர் இம்ரான் கானை ஆட்சியில் இருந்து அகற்றும் வகையில் எதிர்க்கட்சிகள் இப்போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளன.

பாகிஸ்தான் அரசியல் குழப்பம்
இதனால் பாகிஸ்தானில் மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் கூட்டணியில் இருந்தும் கூட பலரும் இம்ரான் கானுக்கு எதிராகத் திரும்பி உள்ளனர். கடந்த சில நாட்களில் மட்டும் இம்ரான் கான் ஆட்சிக்கு ஆதரவு அளித்த பலரும் அவருக்கு எதிராகத் திரும்பி உள்ளனர். குறிப்பாக, பாகிஸ்தான் ராணுவம் கூட இம்ரான் கானுக்கு எதிராகத் திரும்பி உள்ளதால், அவர் ஆட்சியைத் தக்க வைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம்
அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமும் பாக். நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தின் மீது வரும் ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பெரும்பாலான கூட்டணிக் கட்சிகளே இம்ரான் கானுக்கு எதிராக உள்ளதால், அவர் முன்கூட்டியே ராஜினாமா செய்ய உள்ளதாகக் கூறப்பட்டது. இருப்பினும், இந்தத் தகவலை முற்றிலுமாக மறுத்த இம்ரான் கான், தான் கடைசி வரை அரசியல் களத்தில் நின்று விளையாடப் போவதாகத் தெரிவித்தார்.

அந்நிய நாட்டுச் சதி
மேலும், பாகிஸ்தானில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குப் பின்னால் அந்நிய நாட்டுச் சதி உள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இந்தியாவை ஆதரிக்கும் பவுர்புல்லான நாடு கொடுக்கும் அழுத்தம் காரணமாகவே தனக்கு எதிராகச் சதி செய்யப்படுவதாகவும் இதற்குப் பின்னணியில் அமெரிக்கா உள்ளதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தார். பின்னர், அந்நாட்டு அரசு அளித்த விளக்கத்தில் இம்ரான் கான் தவறுதலாக அமெரிக்காவை குறிப்பிட்டதாகத் தெரிவித்திருந்தது.

நேபாளத்தில் சந்திப்பு
இதற்கிடையே பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்திய மற்றும் மேற்கத்தியத் தலைவர்களுடன் இணைந்து சில திட்டங்களைத் தீட்டி வருவதாக இம்ரான் கான் சாடியுள்ளார். மேலும், பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சொந்த ராணுவத்திடம் இருந்து தப்பிக்க நேபாளத்தில் பிரதமர் மோடியை ரகசியமாகச் சந்தித்ததாகவும் செய்தியாளர் பர்கா தத்தின் புத்தகத்தை மேற்கோள் காட்டி இம்ரான் கான் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தான் இந்தியாவுக்கு எதிரானவர் இல்லை என்றும் இந்தியாவின் கொள்கைகளுக்கே எதிரானவர் என்றும் இம்ரான் கான் தெரிவித்தார்.இதற்கிடையே பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்திய மற்றும் மேற்கத்தியத் தலைவர்களுடன் இணைந்து சில திட்டங்களைத் தீட்டி வருவதாக இம்ரான் கான் சாடியுள்ளார். மேலும், பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சொந்த ராணுவத்திடம் இருந்து தப்பிக்க நேபாளத்தில் பிரதமர் மோடியை ரகசியமாகச் சந்தாகவும் செய்தியாளர் பர்கா தத்தின் புத்தகத்தை மேற்கோள் காட்டி இம்ரான் கான் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தான் இந்தியாவுக்கு எதிரானவர் இல்லை என்றும் இந்தியாவின் கொள்கைகளுக்கே எதிரானவர் என்றும் இம்ரான் கான் தெரிவித்தார்.

கோபம்
இந்தச் சூழலில் இன்று இஸ்லாமாபாத்தில் பேசிய இம்ரான் கான் பாகிஸ்தான் அரசியல் குழப்பத்திற்குப் பின்னர், இந்தியாவை ஆதரிக்கும் ஒரு சக்திவாய்ந்த நாடு உள்ளதாக அவர் சாடியுள்ளார். சமீபத்தில் தான் ரஷ்யா சென்று வந்ததாலேயே அந்த சக்திவாய்ந்த நாடு, பாக். மீது கோபமாக உள்ளதாகவும் அவர் விமர்சித்தார். மேலும், எந்தவொரு நாட்டிற்கும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை என்பது முக்கியமானது என்றும் வலியுறுத்தினார்.
Recommended Video

முக்கியம்
பாகிஸ்தான் மற்ற நாடுகளை நம்பி உள்ளதாலேயே பாகிஸ்தான் நாட்டால் உச்சக்கட்டத் திறனை அடைய முடியாமல் போனது என்று இம்ரான் கான், சுயமான வெளியுறவுக் கொள்கை கொண்டு இருக்காத ஒரு நாட்டால் அதன் மக்களின் நலன்களைப் பாதுகாக்க முடியாது என்றும் வெளிநாட்டு உதவிக்காக மற்ற நாடுகளின் விருப்பத்திற்கு அடிபணிவதை விட ஒரு நாட்டின் நலன்களைப் பாதுகாக்கச் சுதந்திரமான முடிவுகளை எடுப்பது மிகவும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications