அணு ஆயுதங்கள் ஏந்திய ஆளில்லா விமானங்கள் மூலம் இந்தியாவை தாக்க பாக். ரெடி: ஹபீஸ் சயீத்
இஸ்லாமாபாத்: அணு ஆயுதங்கள் ஏந்திய ஆளில்லா விமானங்கள் மூலம் இந்தியாவை தாக்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக 26/11 மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான தீவிரவாதி ஹபீஸ் சயீத் எச்சரித்துள்ளார்.
26/11 மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜமாதுத்தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் பாகிஸ்தானில் நடந்த பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சயீத் கூறுகையில்,

இந்தியா ஆளில்லா விமானங்கள் மூலம் பாகிஸ்தானை தாக்கினால் அந்த நாட்டையே அணு ஆயுதங்கள் ஏந்திய ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றார்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள 10 கிராமங்களுக்கு சென்ற ஹபீஸ் சயீத் அங்குள்ள மக்களின் உணர்ச்சிகளை இந்தியாவுக்கு எதிராக தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளார். ஜமாதுத்தவா ஒரு தீவிரவாத அமைப்பு என்றும், ஹபீஸ் சயீத் ஒரு தீவிரவாதி என்றும் ஐ.நா. கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சயீத் தனது அமைப்பை சேர்ந்த பல தீவிரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications