இந்தியா தான் குறி.. பயங்கரவாத முகாம்களை காக்க பாகிஸ்தான் செய்ற வேலையை பாருங்க! உளவுத்துறை ‛அலர்ட்’
இஸ்லாமாபாத்: ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை நம் நாடு அழித்தது. இதையடுத்து பாகிஸ்தான் திருந்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் திருந்தவில்லை. மாறாக எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பயங்கரவாத முகாம்கள், 13 லாஞ்ச் பேர்ட்டுகளை பாகிஸ்தான் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அடர் காட்டுக்குள் இந்த முகாம்கள் அமைக்கப்படுவதோடு, இந்தியாவின் தாக்குதலில் பாதிப்பு ஏற்படாதவாறு சென்சார் உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.அதுபற்றிய விபரம் வருமாறு:
கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தான் மீது ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை எடுத்தது. கடந்த மாதம் 7 ம் தேதி முதல் 10ம் தேதி வரை 4 நாட்கள் ஏவுகணைகள் மூலம் நம் நாடு பாகிஸ்தானை குறிவைத்து தாக்கியது. இதில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

அதேபோல் ராணுவ தளம், விமான தளங்கள் என்று முக்கிய 12 இடங்கள் பலத்த சேதமடைந்தன. ‛ஆபரேஷன் சிந்தூர்' மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் அழிந்த பயங்கரவாத முகாம்களில் 5 இடங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்தன. 4 இடங்களில் பாகிஸ்தானில் இருந்தன.
9 பயங்கரவாத முகாம்கள் அழிப்பு
ஜெய்ஷ் -இ -முகமது பயங்கரவாத அமைப்பின் பஹவால்பூரில் உள்ள மார்கஸ் சுபன் அல்லா முகாம், தெஹ்ரா காலனில் உள்ள சர்ஜால் முகாம், கோட்லியில் உள்ள மார்கஸ் அப்பாஸ் முகாம், முசாபராபாத்தில் உள்ள சைதினா பிலால் முகாம் உள்ளிட்டவை தாக்கப்பட்டன. அதேபோல் லஷ்கர் இ தொய்பாவுக்கு சொந்தமான முரித்கேவில் உள்ள மார்கஸ் தொய்பா, பர்னாலாவில் உள்ள மார்கஸ் அஜில் ஹதித் முகாம், முசாபராபாத்தில் உள்ள ஷாவாய் நல்லா முகாம், ஹிஜாபுல் முஜாகிதீன் அமைப்பின் சியால்கேட்டில் உள்ள மெக்மூனா ஜோயா, கோட்லியில் உள்ள மாஸ்கர் ரஹீல் ஷாகித் உள்ளிட்டவை தாக்கி அழிக்கப்பட்டன.
நம் நாட்டின் தாக்குதலில் கதிகலங்கிய பாகிஸ்தான் நம் நாட்டிடம் கெஞ்சியது. தாக்குதலை நிறுத்தும்படி கூறியது. இதையடுத்து மோதல் முடிவுக்கு வந்தது. இருப்பினும் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை இன்னும் முடியவில்லை. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் உடனடியாக உரிய முறையில் பதிிலடி கொடுக்கப்படும் என்று நம் நாடு எச்சரித்துள்ளது. இந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதன் மூலம் பாகிஸ்தான் திருந்தும் என நம் நாடு நினைத்தது. ஆனால் பாகிஸ்தான் இன்னும் திருந்தவில்லை.
உருவாக்கப்படும் பயங்கரவாத முகாம்கள்
ஏனென்றால் பாகிஸ்தான் தன் வசம் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மீண்டும் பயங்கரவாத முகாம்கள் அமைத்தல் மற்றும் பயங்கரவாத முகாம்களை இந்தியாவின் தாக்குதலில் இருந்து காக்கும் வகையில் மறுசீரமைப்பு செய்ய முயற்சிப்பதாக நம் உளவுத்துறை கண்டறிந்துள்ளது. பாகிஸ்தான் அரசு, அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ உளவுத்துறை ஐஎஸ்ஐ உள்ளிட்டவற்றின் முழு ஆதரவில் பயங்கரவாத முகாம்கள், பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த முகாம்கள் என்பதை எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. அடர் வனப்பகுதியில் சேட்டிலைட்டில் சிக்காத வகையிலும், ட்ரோன், ஏவுகணைகள் உள்ளிட்டவற்றால் தாக்க முடியாத வகையிலும் இந்த பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் அமைத்து வருகிறது.
எங்கெல்லாம் அமைக்கப்படுகிறது?
அதன்படி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் தாக்குதலுக்கு உள்ளான இடங்கள் உள்பட பிற இடங்களில் பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் மீண்டும் அமைக்கப்படுகிறது. லுனி, புட்வால், தைபு போஸ்ட், ஜமிலா போஸ்ட், உம்ரான்வாலி, சாப்ரார், பார்வர்ட் கஹூதா, சோட்டா சாக், ஜாங்க்லேரா உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாத முகாம்கள் மறுகட்டமைப்பு செய்யப்படுகின்றன. இந்த இடங்களில் பிளாக் ஹீட் சென்சார்,மரங்களுக்கு நடுவே ஊடுருவி பார்க்க கூடிய ரேடார், சேட்டிலைட் கேமரா, தெர்மல் சென்சார்கள், லோ பிரிக்கியன்சி ரேடார், ட்ரோன் எதிர்ப்பு சிஸ்டம்கள் பொருத்தப்பட உள்ளன. உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வானில் பறக்கும் ட்ரோன், ஏவுகணை உள்பட பலவற்றை எளிதாக கண்டறிந்து பயங்கவராதிகள் எஸ்கேப் ஆக முடியும்.
மேலும் இங்கு பயங்கரவாத முகாம்கள் சிறிய அளவில் தனித்தனியாக அமைக்கப்பட்டு வருகிறது. பெரிய அளவில் அமைக்கப்படும்போது நம் நாடு தாக்கினால் நிறைய பேர் இறப்பார்கள். ஆனால் சிறிய அளவில் தனித்தனியாக அமைக்கப்படும்போது உயிரிழப்பு குறையும். இதனை மனதில் வைத்து பாகிஸ்தான் உளவுத்துறை இந்த சதி வேலையில் ஈடுபட்டு வுருகிறது. இந்த சிறிய பயங்கரவாத முகாம்களில் சொந்தமாக பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது
13 இடங்களில் லாஞ்ச் பேட்கள்
அதேபோல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 13 லாஞ்ச்பேட்கள் மறுகட்டமைப்பு செய்யப்படுகின்ற. அதன்படி கேல், ஷார்தி, துனியால், அதுகம், ஜூரா, லிபா பள்ளத்தாக்கு, பசிபன் சாமன், தண்பானி, நய்யாலி, ஜான்கோட், சக்கோட்டி, நிகையில், பார்வர்ட் கஹூதா உள்ளிட்ட இடங்களில் லாஞ்ச்பேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 4 லாஞ்ச்பேர்டுகள் சர்வதேச எல்லையையொட்டி அநை்துள்ளது. இது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அழிக்கப்பட்ட நிலையில் தற்போது அதனை மீண்டும் மறுகட்டமைப்பு செய்து பயன்படுத்த பாகிஸ்தான் வேலை செய்து வருகிறது.
மேலும் சமீபத்தில் பஹவல்பூரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ரகசிய மீட்டிங் நடத்தினர். இதில் ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் தி ரெசிஸ்டண்ட் ப்ரண்ட் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். அதேபோல் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். அப்போது பயங்கரவாத முகாம்களுக்கு தேவை நிதியுதவி மற்றும் ஆட்களை வழங்குவதாக பாகிஸ்தான் உளவுத்துறை உறுதியளித்துள்ளது. இது நம் நாட்டுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications