அடிச்ச அடி அப்படி..அலறியடித்து ஓடி வந்த பாகிஸ்தான்! காரணம் இந்தியாவின் ‘அந்த’ மூவ்.. அடுத்து என்ன?

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட ராணுவ நடவடிக்கைகளால் பாகிஸ்தான் பெரும் நெருக்கடியில் இருக்கிறது. இந்த நிலையில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பாகிஸ்தான் இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது. இந்தியா தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆனால், ஆபரேசன் சிந்தூர் தொடர்வதாகவும், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்தானது ரத்தானது தான் என இந்தியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியது. அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அட்டாரி வாகா எல்லை மூடப்பட்டது, பாகிஸ்தானியர்களை வெளியேற்றியது, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

தொடர்ந்து பாகிஸ்தான் தனது வான் பரப்பையும் மூடிய நிலையில், இரு நாடுகள் இடையே மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் இரவு நேரங்களில் இந்திய பகுதிகளை குறி வைத்து ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்த நிலையில் இந்தியா அதற்கு பதில் தாக்குதல் நடத்தியது.

India Indus Water Treaty Pakistan

மேலும் பாகிஸ்தானின் முக்கிய பகுதிகளை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானின் போர் விமானங்கள், ராணுவ நிலைகள் ஆகியவை தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்த நிலையில் இரு தரப்பும் அதற்கு ஒப்புக்கொண்டது. தொடர்ந்து நேற்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் தனது வான் பரப்பை திறந்து விட்டாலும் தாக்குதல் நடத்திய இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பின்வாங்க போவதில்லை என கூறப்படுகிறது.

குறிப்பாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது நிறுத்தி வைத்தது தான் என இந்தியா தரப்பில் பாகிஸ்தானிடம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவின் இராணுவ அழுத்தத்தால் பாகிஸ்தான் பெரும் நெருக்கடியில் உள்ள நிலையில், சிந்து நதிக்கரை ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் நீர்வளத்துறை செயலாளர் சயீத் அலி முர்தசா, இந்திய நீர்வளத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், இந்தியா தனது முடிவை மறுபரிசீலிக்க வேண்டும் என்றும், பேசுவதற்குத் தயார் என்றும் தெரிவித்துள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது. 1960ல் உருவான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் மூலம், இந்தியா சிந்து நதியின் மொத்த நீரின் அளவில் 30 சதவீதத்தை பெறுகிறது. ஆனால், பாகிஸ்தான் 70 சதவீத நீரைப் பெறுகிறது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்தானதால் வெள்ள அபாய எச்சரிக்கை உள்ளிட்ட தகவல்களை பாகிஸ்தானுடன் பகிர்வதை இந்தியா நிறுத்தியுள்ளது. இதனால் ராணுவ தாக்குதலோடு, நதிநீர் தொடர்பாகவும் பாகிஸ்தான் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

பாகிஸ்தான் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை முழுமையாக முடிவுக்கு கொண்டு வராத வரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் செயல்படாது என வெளியுறவுத்துறை பேச்சாளர் ரந்தீர் ஜெயஸ்வால் தெரிவித்ததும், பிரதமர் நரேந்திர மோடி, நீர் மற்றும் ரத்தம் ஒரே நேரத்தில் பாயாது என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது. இது பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் மிக தீவிரமான நடவடிக்கைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+