"டெல்லியின் மறைமுக போர்" தாலிபான்களை சமாளிக்க திணறும் பாகிஸ்தான்.. இந்தியா மீது அபாண்டம்
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில் தற்போது 48 மணி நேரம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் அரசு, இந்தியாவுக்காக மறைமுக போரில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் காவ்ஜா ஆசிப் இவ்வாறு அபாண்ட குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
நம் அண்டை நாடுகளாக உள்ள பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானின் தாலிபான்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. எல்லையில் இரு நாடுகளும் சண்டையிட்டு வருகின்றன. நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஆப்கானிஸ்தானில் செயல்படும் டிடிபி எனும் தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பினருக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இருதரப்பினரும் மாறி மாறி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தனர்.

ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மோதல்
இதற்கிடையே டிடிபி தாலிபான் தலைவர்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த வாரம் போர் விமானங்கள் மூலமாக தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். எல்லை தாண்டி பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலால் கோபமடைந்த தாலிபான்கள், பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தான் எல்லையில் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராக்கெட் குண்டுகளையும் வீசினர்.
இதில் பாகிஸ்தான் தரப்பில் 58 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தியதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து சவுதி அரேபியா மற்றும் கத்தார் நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு மோதலை முடித்து வைத்தது. எனினும் நீண்ட நாட்கள் இது நீடிக்கவில்லை. மாறாக நேற்று அதிகாலையிலேயே தாலிபான் ராணுவமும், பாகிஸ்தான் ராணுவமும் மாறி மாறி துப்பாக்கிச்சூடு, ஷெல் தாக்குதல் நடத்தியது.
டெல்லி தான் காரணம்
ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் இருநாடுகளின் எல்லையில் இந்த மோதல் வலுத்தது. இதில் பாகிஸ்தான் தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். அதேபோல் ஆப்கானிஸ்தான் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் மீண்டும் கத்தார் மற்றும் சவுதி அரேபியா சார்பில், தாலிபான்கள் மற்றும் பாகிஸ்தானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் தாக்குதலை நிறுத்தினர். இதனால் 48 மணி நேரம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் இதற்கு எல்லாம் டெல்லி தான் காரணம் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காவ்ஜா ஆசிப் அபாண்டமாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இந்தியாவுக்காக மறைமுக போர்
ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் அரசு, இந்தியாவுக்காக மறைமுக போரில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் காவ்ஜா ஆசிப் அந்நாட்டு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
போர் நிறுத்தம் நீடிக்குமா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது, ஏனெனில், ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் அரசு டெல்லி ஆதரவுடன் முடிவுகளை எடுக்கிறது. தற்போது, காபூல் (ஆப்கானிஸ்தான்) டெல்லியின் மறைமுக போரை நடத்தி வருகிறது. தாலிபானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி, தனது ஆறு நாள் இந்தியப் பயணத்தின் போது சில மறைமுகமான "திட்டங்களை" வகுத்துள்ளார்.
வர்த்தகம் மற்றும் இருதரப்பு உறவுகளை மையப்படுத்தி இந்தியாவுக்கு சென்றதாக கூறினாலும் மறைமுக திட்டங்கள் வகுக்கப்பட்டு இருப்பதாக சூசகமாக கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications