80% நீர் காலி.. 12 லட்சம் மக்கள் வாழ்வாதாரமே போச்சு.. சிந்து நதி நீர் இல்லாமல் திணறும் பாகிஸ்தான்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உடனான மோதலை தொடர்ந்து இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. சிந்து நதி பாகிஸ்தானுக்கு முக்கியமான நீர் ஆதாரமாக இருக்கும் நிலையில், இந்தியாவின் இந்த முடிவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்கச் சிந்து நதியில் ஏற்படும் மாற்றத்தால் பாகிஸ்தான் கதிகலங்கிப் போய் இருக்கிறது. 80% நீர் குறைந்துவிட்ட நிலையில், பல லட்சம் பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. பாகிஸ்தானின் விவசாயத்திற்குச் சிந்து நதி நீர் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் நிலையில், இந்தியாவின் இந்த முடிவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதையடுத்து சிந்து நதி நீரை இந்தியா தனது தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

Pakistan s Indus Delta Sinks 1 2 Million Displaced 80 Water Lost

நிலைமை மோசம்

இது ஒரு பக்கம் இருக்கப் பாகிஸ்தானின் சிந்து நதிப் படுகையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே இருக்கிறதாம். இதனால் அந்த நதிக்கரைக்கு அருகே உள்ள கிராம மக்கள் அங்கிருந்து காலி செய்து வருகிறார்கள். உப்புக் கரிக்கும் மண் அந்த பகுதியை மொத்தமாக நாசம் செய்துவிட்டது.. இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கப் பல காலத்திற்கு முன்பிருந்தே இந்த சிக்கல் தொடர்கிறது.

குறிப்பாகச் சிந்து நதி அரபிக் கடலில் கலக்கும் பகுதியில், கடல் நீர் உள்ளே ஊடுருவி வருகிறது. இது அந்த பகுதியின் வேளாண்மை மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைத்துள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்று தான் காரோ சான் நகரம். இந்த கிராமம் சிந்து நதி கடலில் கலக்கும் இடத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஆனாலும், இங்குள்ள நன்னீரும் உப்பு நீராக மாறிவிட்டது. இதனால் இப்போது இங்கு வெறும் நான்கு வீடுகள் மட்டுமே உள்ளன.

வெளியேற்றம்

இந்த காரோ சான் ஒரு காலத்தில் சுமார் 40 கிராமங்களைக் கொண்டிருந்தது. ஆனால், கடல் மட்டம் உயர்ந்ததால் பெரும்பாலானவை அழிந்துவிட்டன. மக்கள் தொகையும் கூட கணிசமாகக் குறைந்துவிட்டது. இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் கராச்சிக்கு செல்கிறார்கள். சிந்து நதிப் படுகையில் ஏற்படும் இந்த மாற்றத்தால் இதுபோல மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து வெளியேறுவது பாகிஸ்தானில் தொடர்ந்து வருகிறது.

80% நீர் குறைவு

கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் சிந்து நதிப் படுகைப் பகுதியிலிருந்து சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்ததாக ஜின்னா இன்ஸ்டிடியூட் அமைப்பின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 1950களில் இருந்து நீர்ப்பாசனக் கால்வாய்கள், நீர்மின் அணைகள் உள்ளிட்ட பல காரணங்களால் இங்கு வரும் நீர்மட்டம் 80% வரை குறைந்துவிட்டதாக அமெரிக்க-பாகிஸ்தான் சென்டர் ஃபார் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் இன் வாட்டர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனால் கடல் நீர் மெல்ல நதிப்படுகையில் ஊடுருவி வருகிறது.. 1990 முதல் நீரின் உப்புத்தன்மை சுமார் 70% அதிகரித்துள்ளது. இதனால் இந்த பகுதியில் விவசாயம் என்பதே முடியாத ஒன்றாகிவிட்டது. மேலும், இதனால் இறால் மற்றும் நண்டுகளும் பெரியளவில் அழிந்துவிட்டன.

சிந்து நதி நீர்

திபெத்தில் தொடங்கும் சிந்து நதி காஷ்மீர் வழியாகப் பாய்ந்து, பாகிஸ்தானுக்குப் போகிறது. சிந்து நதியும் அதன் துணை நதிகளும் பாகிஸ்தானின் 80% விவசாய நிலங்களுக்குப் பாசனம் செய்து, பல லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வந்தது. இந்த சிந்து நதி கடலில் கலக்கும்போது படியும் செழுமையான வண்டலால் உருவான இந்த டெல்டா, ஒரு காலத்தில் விவசாயம், மீன்பிடித்தலுக்கு ஏற்றதாக இருந்தது.

கதிகலங்கும் பாகிஸ்தான்

ஆனால், 2019இல் கடல் நீர் ஊடுருவல் இங்குள்ள 16%க்கும் அதிகமான வளமான நிலம் பயனற்றதாகிவிட்டது. குறிப்பாகப் பாகிஸ்தானின் கெடி பந்தர் நகரில் பல வேளாண் பகுதிகள் உப்புப் படலத்தால் மூடப்பட்டுள்ளது. நிலைமை மோசமாவதை உணர்ந்த பாகிஸ்தான் அரசு சிந்து நதிப் படுகையை மீட்டெடுக்க 2021இல் ஒரு திட்டத்தைத் தொடங்கியது. உப்புத்தன்மையைச் சரிசெய்து, உள்ளூர் விவசாயம் மீட்டெடுப்பதே இதன் நோக்கம். கடலோரப் பகுதிகளின் சில இடங்களில் சதுப்புநிலங்கள் மீட்டெடுக்கப்பட்டாலும், பிற பகுதிகளில் ஆக்கிரமிப்பால் அழிவு தொடர்கிறது.

இந்த சூழலில் இந்தியாவும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ள நிலையில், இங்கு வரும் நீர் மேலும் குறையலாம் என்று அஞ்சப்படுகிறது. அப்படி நீர் குறைந்தால் உப்பு படலம் மேலும் அதிகரிக்கும். அது பாதிப்பை இன்னும் மோசமானதாகவே மாற்றும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+