இது எவ்வளவு கேவலம் தெரியுமா.. போலி நியூஸை உண்மை என்ற பாக். துணை பிரதமர்! அம்பலப்படுத்திய சொந்த ஊடகம்
இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலின் போது இந்தியா தாக்குதலைச் சமாளிக்க முடியாமலேயே பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யக் கோரிக்கை விடுத்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதை மறைத்து பாகிஸ்தான் பொய்யான செய்திகளைப் பரப்பி வருகிறது. இதுபோல சமூக வலைத்தளங்களில் பரவும் பொய் செய்தியை நாடாளுமன்றத்திலேயே மேற்கோள் காட்டப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளது.
கடந்த வாரம் இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலின் போது இந்தியா தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை. பாகிஸ்தானில் பல இடங்களில் நாம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் திணறிப் போனதே உண்மை. ஆனால், மோதல் நடந்து கொண்டிருந்த போதும் சரி, மோதல் முடிவுக்கு வந்த பிறகும் சரி பாகிஸ்தான் தொடர்ந்து பொய்யான தகவல்களையே பரப்பி வருகிறது.

பொய் செய்தி
ஆனால், அதைச் சர்வதேச ஊடகங்களும் இந்தியாவும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. இதற்கிடையே மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய போது போலி செய்தியை மேற்கோள் காட்டி பேசினார். அதை அங்கிருந்த எம்பிக்கள் வரவேற்கவும் செய்தனர். அதாவது தனது நாட்டின் விமானப்படையை இங்கிலாந்தைச் சேர்ந்த தி டெய்லி டெலிகிராப் பாராட்டியிருப்பதாக இஷாக் டார் மேற்கோள் காட்டினார்,
பாகிஸ்தான் துணைப் பிரதமர்
தனது உரையில் இஷாக் டார், "இங்கிலாந்தில் வெளியாகும் டெலிகிராப் செய்தித்தாள் பாகிஸ்தான் விமானப்படையைப் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் தான் வானில் கொடி கட்டி பறக்கும் ராஜா என்று குறிப்பிட்டுள்ளது" என்று ஷாக் டார் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு இணையத்தில் டிரெண்டானது. இதையடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஐவெரிஃபை என்ற உண்மை சரிபார்ப்பு குழு இதை பேக்ட் செக் செய்தது.
அதில் பாகிஸ்தான் துணைப் பிரதமர் பேசியது தவறான தகவல் என்பது தெரிய வந்தது. பிறகு பாகிஸ்தான் செய்தித்தாளான தி டான் உள்ளிட்ட செய்தி சேனல்களும் டார் மேற்கோள் காட்டியது பொய்யான செய்தி என்றும் சோஷியல் மீடியாவில் பரவும் செய்தியையே இஷாக் டார் பேசியிருப்பதாகக் குறிப்பிட்டது. மேலும், தி டெய்லி டெலிகிராஃப் தளத்திலும் இதுபோல ஏதேனும் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக என்பது சரிபார்க்கப்பட்டது. இருப்பினும், அதுபோல எந்தவொரு செய்தியையும் தி டெய்லி டெலிகிராஃப் வெளியிடவில்லை என்பது தெரிய வந்தது.
ஏகப்பட்ட பிழைகள்
கடந்த மே 10ம் தேதி முதல் இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வந்தது. இருப்பினும், அந்தப் படத்தில் எழுத்துப் பிழைகள், டைபோ பிழைகள், வாக்கிய முறைகளில் பிழை என ஏகப்பட்ட முரண்பாடுகள் இருந்தது. ஆனாலும் அந்த போலி செய்தி சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. அதையே தான் அந்நாட்டின் துணைப் பிரதமரும் மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார்.
அம்பலப்படுத்திய சொந்த ஊடகம்
இதை பேக்ட் செக் செய்துள்ள பாக். நாட்டை சேர்ந்த தி டான் செய்தி நிறுவனமே இது போலியானது எனத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாக். செய்தியாளர் ஒருவர் தனது ட்விட்டரில், "பொய் செய்திகள் உண்மையை எவ்வாறு மறைக்கின்றன என்பதற்கு மற்றொரு உதாரணம்.. இன்று துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார், நாடாளுமன்றத்தில் தனது உரையின் போது, இந்தப் பொய்யான செய்தியை மேற்கோள் காட்டினார். அதை அவரே மேற்கொள் காட்டியிருக்கிறார்" என்று பகிர்ந்துள்ளார்,
பொதுவாக இப்போது எல்லா இடங்களிலும் போலி செய்தி பரவுகிறது. அது பெரிய பிரச்சினையாக மாறிவிட்டதை மறுப்பதற்கு இல்லை.. ஆனால், துணைப் பிரதமர் போல ஒரு உயர் பதவியில் இருப்பவரே போலி செய்தியை நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டுவதெல்லாம் வேறு எங்கும் நடக்காது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications