தொடர்ந்து கையேந்தும் பாகிஸ்தான்.. முதலில் IMF.. இப்போது ஆசிய வங்கி.. வேற வழியே இல்லை போல!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தான் பொருளாதாரம் மிக மோசமாக உள்ள நிலையில், அந்த நாடு சர்வதேச அமைப்புகளிடம் கையேந்தி வருகிறது. கடந்த மாதம் தான் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியைப் பெற்ற நிலையில், இப்போது ஆசிய வளர்ச்சி வங்கியிடம் உதவியைக் கேட்டு வாங்கியுள்ளனர். சர்வதேச நிதியைத் தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்துவதால் பாகிஸ்தானுக்கு உதவி செய்யக்கூடாது என இந்தியா கடும் ஆட்சேபனை தெரிவித்த போதிலும், அதைத் தாண்டி உதவி வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் உலக நாடுகள் சர்வதேச அமைப்புகளிடம் தொடர்ந்து உதவி கோரி வருகிறது.

Pakistan Secures 800M ADB Bailout Despite India s Objections

இருப்பினும், இதுபோல சர்வதேச அமைப்புகளிடம் இருந்து பெறும் நிதியைப் பாகிஸ்தான் தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் சர்வதேச அமைப்புகள் பாகிஸ்தானுக்கு உதவக் கூடாது என இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சமீபத்தில் தான் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு உதவி பேக்கேஜை அறிவித்து இருந்தது. இதற்கிடையே இப்போது ஆசிய வளர்ச்சி வங்கியும் பாகிஸ்தானுக்கு உதவியை வழங்கியுள்ளது. இந்தியா கடுமையான ஆட்சேபனைகளைத் தெரிவித்த போதிலும், ஆசிய வளர்ச்சி வங்கி பாகிஸ்தானுக்கு உதவியை வழங்கியுள்ளது.

கடந்த காலங்களில் பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி வழங்கியிருப்பதால் அதைச் சுட்டுக்காட்டி இந்தியா கடுமையான ஆட்சேபனைகளைத் தெரிவித்தது. இருப்பினும், அதைத் தாண்டி பாகிஸ்தானுக்கு 800 மில்லியன் டாலர் உதவி பேக்கேஜ்ஜுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து பாகிஸ்தான் 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 8,500 கோடி) பெற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், இப்போது ஆசிய வளர்ச்சி வங்கியிடமும் பாகிஸ்தான் கையேந்தி இருக்கிறது.

உதவி நிதியைப் பாகிஸ்தான் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்த இந்தியா கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தது. பாகிஸ்தான் பொருளாதாரம் தொடர்ந்து மோசமடைந்து வருவதையும் இந்தியா சுட்டுக்காட்டியது. கடந்த 2018ல் பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13% ஆக இருந்த வரி வருவாய் 2023ல் வெறும் 9.2%ஆகக் குறைந்துள்ளதை இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. பாதுகாப்புத் துறைக்கான செலவுகளைப் பாகிஸ்தான் அதிகரித்ததே இதற்குப் பிரதான காரணமாக இருக்கிறது.

பாகிஸ்தானின் பொருளாதாரம் பலவீனமாக இருப்பதைக் குறிப்பிட்ட இந்தியா, சர்வதேச கடன்களை வளர்ச்சிக்குப் பதிலாக ராணுவ செலவுகளுக்கும் தீவிரவாத செயல்களுக்கும் பாகிஸ்தான் பயன்படுத்தலாம் என்றும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+