அணு குண்டு போடுவோம்! பூச்சாண்டி காட்டும் பாகிஸ்தான்! ஆனா அமைதி தான் வேணுமாம்! அப்படியும் ஒரு உருட்டு

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பகல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பலியான சம்பவம் உலக அளவில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் மீது இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என சொல்லப்படுகிறது. இதற்கிடையே தங்களை தாக்கினாலோ, சிந்து நதி நீரை நிறுத்தினாலோ இந்தியா மீது அணுகுண்டு தாக்குதல் நடத்துவோம் என கூறியிருக்கிறார் ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர்.

கடந்த 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குழுமியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் உட்பட 26 பேர் பலியாகினர். நாடு முழுவதும் இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. குற்றவாளிகள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் விடமாட்டோம் அவர்களுக்கு தக்க தண்டனை பெற்றுத் தருவோம் என பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார்.

Pakistan india international

காஷ்மீர் தாக்குதல்: இது ஒரு புறம் இருக்க இந்த தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் இந்தியா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் இரு நாடுகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க பல முக்கிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு இரு நாடுகளும் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய விமானப்படை, கப்பற்படை, தரைப்படை என முப்படைகளும் தயார் நிலையில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் துணையாக நிற்கின்றன. பாகிஸ்தான் அவ்வபோது ஏவுகணை சோதனை நடத்தி வரும் நிலையில், இந்தியா எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தலாம். இதற்காக போர் ஒத்திகையும் நாளை நடக்க இருக்கிறது. இந்தியா முழுவதும் முப்படை வீரர்களும் இந்த ஒத்திகையில் ஈடுபட இருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியா தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் மிரட்டி இருக்கிறது.

இது தொடர்பாக பேசி உள்ள ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜஜமாலி," இந்தியாவின் எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். எங்கள் முழு திறனையும் முழு படையையும் பயன்படுத்துவோம். அது பாரம்பரிய ரீதியாகவோ அல்லது அணு ஆயுத வழியில் கூட இருக்கும். நதிநீரை தடுப்பது, திருப்பி விடுவது, அபகரிப்பது என எந்த முயற்சியாக இருந்தாலும் அது பாகிஸ்தானுக்கு எதிரான போர் நடவடிக்கை தான். அதற்காக அணு ஆயுதம் உள்ளிட்ட முழு பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும்.

அதே நேரத்தில் இந்த நாடுகளும் போர் பதற்றத்தை தணிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. இது நாடுகளுமே அணுசக்தி கொண்ட நாடுகளாக இருப்பதால் பதற்றத்தை தணிக்க வேண்டியது அவசியம். காஷ்மீர் தாக்குதல் சம்பவம் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த நியாயமான விசாரணை அவசிய.ம் இதில் சர்வதேச சமூகத்தின் பங்கு இருக்க வேண்டும். ரஷ்யா போன்ற உலக சக்திகள் இந்த விசாரணை அமைப்பில் பங்கேற்க முடியும்" என அவருக்கு கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+