பாலிவுட் படம் பார்த்தா இப்படித்தான்.. இந்தியாவின் தாக்குதலை கிண்டலடிக்கும் இம்ரான் கான் கட்சி!
பாலிவுட் படங்களை பார்த்து இந்தியா கெட்டுப்போய்விட்டது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சி, இந்திய விமானப்படை தாக்குதல் குறித்து கிண்டல் செய்துள்ளது.
Recommended Video

இஸ்லாமாபாத்: பாலிவுட் படங்களை பார்த்து இந்தியா கெட்டுப்போய்விட்டது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சி, இந்திய விமானப்படை தாக்குதல் குறித்து கிண்டல் செய்துள்ளது.
பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப்படை புகுந்து இன்று அதிகாலை 3.30 மணி அளவில் தாக்குதல் நடத்தியது. 12 மிராஜ் 2000 ரக விமானங்கள் மூலம் இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இதுவரை எதுவும் பேசவில்லை. பாகிஸ்தான் செய்திகளிலும் அவர் இதுவரை இதுகுறித்து வாய் திறக்காமல் இருக்கிறார்.

என்ன ஆலோசனை
இன்று மதியம் இம்ரான் கான் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷியை சந்தித்து பேசினார். அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்தியாவிற்கு எப்படி பதில் அளிப்பது என்பது குறித்து ஆலோசனை செய்தார். இந்த நிலையில் இம்ரான் கானின் பிடிஐ (பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப்) கட்சி இந்த தாக்குதல் குறித்து விமர்சனம் செய்துள்ளது.
|
பாலிவுட்
பிடிஐ தனது டிவிட்டில் இந்தியாவில் அதிக அளவில் பாலிவுட் படங்களை பார்ப்பதால் வந்த விளைவு இது. இதனால் பகட்டுத்தனமான ஒரு பிரமைதான் ஏற்படும் என்று கிண்டலாக கூறியுள்ளது.
|
தேர்தல்
பிடிஐ தனது இன்னொரு டிவிட்டில், இந்திய அரசு வரும் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று சுயநலமாக இருக்கிறது. நாடு முழுக்க அவர்கள் பிரச்சனையை உண்டாக்க நினைக்கிறார்கள். உலகில் உள்ள அனைத்து அமைப்புகளையும் பயன்படுத்தி இந்தியாவின் பொய்யை பாகிஸ்தான் அம்பலப்படுத்தும். பாகிஸ்தான் மீதான ஆக்கிரமிப்புக்கு நாங்கள் பதிலடி கொடுப்போம்.
|
எங்களுக்கு தெரியும்
இது தேர்தல் காலம் என்று எங்களுக்கு தெரியும். இந்தியா விமானப்படை பாகிஸ்தான் ராணுவம் மூலம் வேகமாக திருப்பி அனுப்பப்பட்டது யாருக்கும் தெரியாது, என்று நினைக்கிறோம் என்றும் கிண்டல் செய்து இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications