Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தானிடம் இல்லாத பவர்.. இது நடந்தால் சர்வ நாசம் நிச்சயம்.. ஆப்கானிஸ்தான் போடும் ஸ்கெட்ச்!

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மீண்டும் போர் வெடித்துள்ள சூழலில், இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகிறது.. இதனால் போர் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இரு நாடுகளின் ராணுவ பலம், போர் வெடித்தால் எந்த நாட்டிற்கு எது பிளஸ் பாயிண்டாக இருக்கிறது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளது. எல்லை தாண்டி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் தங்கள் நாட்டை சேர்ந்த அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய ஆப்கானிஸ்தான், நேற்றிரவு பாகிஸ்தான் ராணுவ முகாம்களைக் குறிவைத்துத் தாக்குதலை நடத்தியது.

Pakistan vs Afghanistan Number wise Pak might be strong but Taliban has one crucial advantage

பாகிஸ்தான் ஆப்கான் போர்ப் பதற்றம்

இதில் சுமார் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மறுபுறம், ஆப்கானிஸ்தான் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தானும் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. பாக். தலைநகர் காபூல் உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளன. இப்படி இரு நாடுகளும் மாறி மாறி தாக்கும் நிலையில், போர்ச் சூழல் உருவாகியுள்ளது. இந்தச் சூழலில் இரு நாடுகளின் ராணுவப் படைகள் மற்றும் ஆயுதக் கிடங்குகளின் ஒப்பீடு குறித்து நாம் பார்க்கலாம்!

பாகிஸ்தானின் ஆயுதப் படைகளில் அதிக வீரர்கள் உள்ளனர். மேலும், பெரும்பாலும் அது சீன ஆயுதங்களையே பயன்படுத்துகிறது.. பாகிஸ்தான் தொடர்ந்து தனது அணுசக்தி திட்டங்களில் முதலீடு செய்வதுடன், கடற்படை மற்றும் விமானப் படைகளையும் நவீனப்படுத்தி வருகிறது. மறுபுறம், ஆப்கான் தாலிபான்களும் கூட வலிமையாகவே இருக்கிறது. 2021இல் அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு மீண்டும் கண்ட்ரோலை எடுத்த தாலிபான்கள் வலிமையான ராணுவத்தை கொண்டுள்ளது.

ராணுவம்

பாகிஸ்தானின் பாதுகாப்புப் படைகளில் 6.6 லட்சம் வீரர்கள் ஆக்டிவாக உள்ளனர். அவர்களில் 5.6 லட்சம் பேர் ராணுவத்திலும், 70,000 பேர் விமானப் படையிலும் உள்ளனர். 30,000 பேர் கடற்படையிலும் பணியாற்றி வருகிறார்கள். மறுபுறம் ஆப்கான் தாலிபான்களின் ராணுவம் 1.72 லட்சம் ராணுவ வீரர்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், நாட்டிற்காகக் கடைசி வரை களத்தில் இருந்து உயிரே போனாலும் பரவாயில்லை என்ற பற்று இவர்களிடம் உள்ளது.

சண்டை வாகனங்கள்

பாகிஸ்தான் 6,000க்கும் மேற்பட்ட கவசப் போர் வாகனங்கள் உள்ளன. 4,600க்கும் மேற்பட்ட பீரங்கிகளும் உள்ளன. ஆப்கானிஸ்தானின் படைகளிலும் கவசப் போர் வாகனங்கள் உள்ளன. அவை சோவியத் காலத்திற்கு முந்தைய டாங்கிகள் ஆகும். 2021ல் அமெரிக்கப் படைகளிடம் இருந்து கைப்பற்றிய மிக பெரிய ஆயுத கிடங்குகள் ஆப்கன் வசம் இருக்கிறது. ஆனால், ஆப்கான் வசம் எத்தனை ஆயுதங்கள் உள்ள என்பது துல்லியமாகத் தெரியவில்லை..

விமானப்படை

பாகிஸ்தான் 465 போர் விமானங்கள் மற்றும் 260க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களைக் கொண்டுள்ளது. இதில் தாக்குதல் மற்றும் போக்குவரத்து ஹெலிகாப்டர்கள் அடங்கும். ஆப்கானிஸ்தானிடம் ஃபைட்டர் ஜெட்டுகள் இல்லை. உண்மையில் இங்கு தான் ஆப்கானிஸ்தான் பலவீனமாக இருக்கிறது. சொல்லிக் கொள்ளும் அளவுக்கு விமானப்படை இல்லை. அவர்களிடம் குறைந்தது ஆறு விமானங்கள் (சில சோவியத் காலத்தவை) மற்றும் 23 ஹெலிகாப்டர்கள் இருப்பதாகத் தெரிகிறது.

பாகிஸ்தான் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடு. அது 170 அணு ஆயுதப் போர்க்கப்பல்களைக் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் எதுவும் இல்லை.

தாலிபான் பலம்

நம்பர்படி பார்க்கும்போது ஆப்கானைக் காட்டிலும் பாகிஸ்தான் சற்று வலிமையாக இருப்பது போலவே நமக்கு தோன்றும். இருப்பினும், ஆப்கானிஸ்தானின் கரடுமுரடான மலைகளையும் பாலைவனப் பாதைகளையும் தாலிபான்கள் கட்டுப்படுத்துகிறார்கள். இந்த நிலப்பரப்புதான் சோவியத் யூனியனையும் அமெரிக்காவையும் தோற்கடித்தது. அவர்களின் கொரில்லா போர் திறன்களை யாராலும் சமாளிக்கவே முடியாது.

அமெரிக்கப் படைகள் பல ஆண்டுகள் சமாளித்து, மீண்டும் வந்து ஆட்சியைப் பிடிப்பது எல்லாம் சாதாரண விஷயமே இல்லை. இதுவே தாலிபான்களின் மிக பெரிய பலமாக அமைகிறது. இது தாலிபான்களைக் கணிக்க முடியாதவர்களாகவும் ஆபத்தானவர்களாகவும் ஆக்குகின்றன.

உளவு அமைப்புகள்

பாகிஸ்தானின் ISI உலகின் மிகவும் அனுபவம் வாய்ந்த உளவு அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதேநேரம் தாலிபான்களுக்கும் சிறப்பான உளவு நெட்வொர்க் உள்ளது. பாகிஸ்தான் உளவு அமைப்பு எப்படிச் செயல்படும் என்பதையும் ஆப்கன் தெரிந்து வைத்து இருப்பதால் இது அவர்களுக்குப் பெரிய பலவீனமாக அமைகிறது.

பாகிஸ்தானின் ராணுவம் அரசு நிதி மூலம் இயங்குகிறது. பாகிஸ்தான் பொருளாதாரம் ஏற்கனவே பலவீனமாக இருக்கும் சூழலில், நீண்டகாலப் போர் அதன் பொருளாதாரத்தைப் பாதிக்கும். ஆனால், தாலிபான்கள் உள்ளூர் வரிவிதிப்பு மற்றும் வர்த்தகம் மூலம் தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். சர்வதேச அமைப்புகளை ஆப்கானிஸ்தான் சார்ந்திருப்பது குறைகிறது. இதுவும் ஆப்கானிஸ்தானுக்கு ஒரு அட்வான்டேஜாக அமைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+