Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெற்றிநடைபோடும் தாலிபான்.. பாகிஸ்தான் ராணுவ தளத்தை.. ஒரே நாளில் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்.. போச்சு

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், கைபர் பக்துன்க்வாவின் பஜூர் மாவட்டத்தில் உள்ள சலர்சாய் பகுதியில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவ தளத்தை தாலிபான் கைப்பற்றி உள்ளது.

தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) படையினர் மூலம் பாகிஸ்தானின் இந்த ராணுவ தளம் கைப்பற்றப்பட்டு உள்ளது. டிசம்பர் 30, 2024 அன்று காலை பாகிஸ்தானின் ராணுவ தளத்தை கைப்பற்றியதாக TTP கூறியுள்ளது. இந்தப் பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து தாலிபான் படையினர் களமிறக்கப்பட்டதாகவும்.. அந்த தாக்குதலில் தாலிபான் வென்றதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

taliban pakistan afghanistan

தாலிபான்கள் பாகிஸ்தான் ராணுவ தளத்தை ஆக்கிரமித்துள்ள வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த இராணுவத் தளம் சிறிது காலத்திற்கு முன்பு காலி செய்யப்பட்டதாகவும், இங்கு ராணுவ வீரர்கள் யாரும் நிறுத்தப்படவில்லை என்றும் பாகிஸ்தான் சமாளித்து வருகிறது. ஆனால் அங்கே பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாலிபான்களிடம் சரண் அடைந்த வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

தாலிபான்களின் இந்த வெற்றி காரணமாக ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பல்வேறு ராணுவ தளங்களை பாகிஸ்தான் காலி செய்து வருவதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் சண்டை:

ஆப்கானிஸ்தானில் உள்ளது போலவே பாகிஸ்தானில் தாலிபான் அமைப்பு உள்ளது. இந்த தாலிபான் அமைப்பின் ரகசிய தங்கும் இடங்கள், தளவாடங்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளது.

தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) என்று பாகிஸ்தான் தலிபான்கள் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கி பாகிஸ்தான் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துவது வழக்கம். ஆப்கானிஸ்தானில் உள்ள சில பயங்கரவாத அமைப்புகளுக்கும் - இவர்களுக்கும் ஆகாது. பாகிஸ்தான் ராணுவத்திரும் இவர்களுக்கும் கூட மோதல் உள்ளது.

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு தாக்குதல் நடத்துவதாக அவ்வப்போது புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது.

தாலிபான் யார்?:

தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) 2007 இல் உருவாக்கப்பட்டது, பல்வேறு கடுமையான சன்னி இஸ்லாமிய குழுக்களின் அமைப்பாக இது உருவாக்கப்பட்டு வந்தது. பாகிஸ்தானில் தனித்தனியாக செயல்பட்டு வந்த பழங்குடி போராளி குழுக்கள் எல்லாம் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கியது.

மறைந்த பைத்துல்லா மெஹ்சூத் தலைமையில் உருவாக்கப்பட்டது. TTP ஆப்கானிஸ்தான்/பாகிஸ்தான் எல்லையில் தற்போது மிகப்பெரிய போராளி அமைப்பாக உள்ளது. TTP யில் 30,000 முதல் 35,000 உறுப்பினர்கள் உள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, பாகிஸ்தானில் தலிபான் ஆட்சியை நிறுவ வேண்டும். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை தூக்கியெறிவதே இந்த அமைப்பின் குறிக்கோளாகும். அதற்காக, பாகிஸ்தான் ராணுவத்தை நேரடியாகத் தாக்கி, அரசியல்வாதிகளைக் கொன்று பாகிஸ்தானை சீர்குலைக்கும் பணியே டிடிபி அமைப்பின் முக்கிய குறிக்கோள் ஆகும். பல தற்கொலை குண்டுவெடிப்புகள், தாக்குதலை இந்த அமைப்பு பாகிஸ்தானில் நடத்தி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில்தான் ஆப்கானிஸ்தானில் உள்ள டிடிபி தாலிபான் மையங்கள், தளவாடகங்களில் திடீரென பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் உள்ளேயே தாலிபான் ஆதரவு - எதிர்ப்பு குழுக்கள் உள்ளன. கடந்த மார்ச் மாதம் ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் மீண்டும்.. இப்போது நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலால் இரண்டு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அச்சம் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+