எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. சீனாவிடம் கையேந்தும் பாகிஸ்தான்.. இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது நம் நாட்டின் ஏவுகணைகள் பாகிஸ்தானின் வான்வெளி பாதுகாப்பு சிஸ்டமை தகர்த்து அந்த நாட்டில் தாக்குதல் நடத்தியது. இதனால் பயந்துபோன பாகிஸ்தான் நம் நாட்டில் பயன்பாட்டில் உள்ள எஸ் -400 ரக வான்வெளி பாதுகாப்புக்கு சிஸ்டமிற்கு நிகர் என கூறப்படும் எச்க்யூ -19 வகை வான்வெளி பாதுகாப்புஅமைப்பை வாங்க சீனாவிடம் கையேந்தி கெஞ்சி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாகிஸ்தானை எடுத்து கொண்டால் சீனாவின் ராணுவ தளவாடங்களை தான் அதிகமாக பயன்படுத்தி வருகிறது. ராணுவ ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், வான் பாதுகாப்பு சிஸ்டம் உள்பட பல ராணுவ தளவாடங்களை சீனாவிடம் இருந்து தான் பாகிஸ்தான் இறக்குமதி செய்து வருகிறது.

pakistan china defence

கடந்த ஆண்டு பஹல்காம் தாக்குதலுக்கு பதிலாக நம் நாடு மே 7 ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பாகிஸ்தானை பந்தாடினோம். நம் நாட்டின் முப்படைகளும் சேர்ந்து பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது.

ஆபரேஷன் சிந்தூரில் வாங்கிய அடி

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள், ராணுவ தளங்கள், விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் தனது வான் பாதுகாப்பிற்காக சீனாவில் இருந்து வாங்கிய HQ-9B என்ற சிஸ்டமை பயன்படுத்தியது. ஆனால் அதனை தாண்டி நம் நாடு பாகிஸ்தானுக்கு சம்மட்டி அடி கொடுத்தது. இதையடுத்து தான் பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. அதன்பிறகு தான் பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை நம் நாடு நிறுத்தியது.

இந்த தாக்குதலின்போது பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய எச்க்யூ -9பி ரக வான் பாதுகாப்பு சிஸ்டம்கள் அழிக்கப்பட்டன. இந்த வகையை சேர்ந்த ஐந்து ராடார்கள் அழிக்கப்பட்டன. இதனால் பாகிஸ்தான் நிலைக்குலைந்து போனதோடு, நம் நாட்டில் இருந்து பறந்து சென்ற டிரோன், ஏவுகணைகளை தடுக்க முடியாமல் திணறியது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் தனது வான் பாதுகாப்பை வலுப்படுத்த முடிவு செய்துள்ளது.

எச்க்யூ - 19 ரக வான் பாதுகாப்பு சிஸ்டம்

இந்நிலையில் தான் நம் நாட்டின் வான்வெளி பாதுகாப்பில் ரஷ்யா தயாரிப்பான எஸ் -400 ரக வான் பாதுகாப்பு சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள், டிரோன்களை இந்த அமைப்பு துல்லியமாக கண்டுபிடித்து அழித்தது. இதனால் எஸ் - 400 போன்ற வான் பாதுகாப்பு சிஸ்டமை வாங்க பாகிஸ்தான் துடித்து வருகிறது. அந்த வகையில் ரஷ்யாவின் எஸ் -400 ரக வான் பாதுகாப்பு சிஸ்டமிற்கு நிகர் என்று கூறி சீனா HQ-19 ரக வான் பாதுகாப்பு சிஸ்டமை உருவாக்கி உள்ளது. இதனை சீனா பயன்படுத்தி வருகிறது. தற்போது இந்த சிஸ்டமை வாங்க தான் பாகிஸ்தான் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

சிறப்புகள் என்னென்ன?

இந்த HQ-19 வான் பாதுகாப்பு சிஸ்டம் என்பது சீனா ஏரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கார்ப்பரேஷன் (CASC) மூலம் உருவாக்கப்பட்டது. இது அமெரிக்காவின் THAAD மற்றும் SM-3 இன்டர்செப்டர்களுக்கு இணையானதாக கூறப்படுகிறது. சீனாவின் மிகவும் மேம்பட்ட வான் பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. இது, 1,000 முதல் 3,000 கி.மீ வரையிலான பாலிஸ்டிக் ஏவுகணைகளை துல்லியமாக இடைமறிக்கும் திறன் கொண்டது. இது 200 கிமீ தொலைவில் வரும் ஏவுகணைகளை கூட கண்டுபிடித்து அழிக்கும் திறன் கொண்டது.

அதுமட்டுமின்றி இதன் முக்கியமான தனித்துவம் என்பது Hypersonic Glide Vehicles(HGV)-யை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டது. எச்ஜிவி என்பது ஒரு ஏவுகணை மாதிரியான குண்டு தான். இது மாக் 5 வேகத்தில் வேகமாக செல்லும். இதன் பாதையை பல வான் பாதுகாப்பு சிஸ்டம்களால் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் இந்த பாதையை கூட எச்க்யூ 19 ரக வான் பாதுகாப்பு சிஸ்டம் கண்டறிந்து அழிக்கும் திறன் கொணட்து. அதோடு மேலும் அதிநவீன 610A AESA ரேடார் உள்ளதால் இதனால் நீண்டதூரம் கண்காணிக்க முடியும். இதனால் தான் பாகிஸ்தான் வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

கொள்முதல் மதிப்பு என்ன?

மேலும் தற்போதைய எச்க்யூ - 19 பி வான் பாதுகாப்பு சிஸ்டமின் கொள்முதல் ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 12 பில்லியன் டாலர் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் பாகிஸ்தானின் நிதி நிலைமையை எடுத்து கொண்டால் இது மிகப்பெரிய தொகையாகும். ஒருவேளை பாகிஸ்தான் வாங்க நினைத்தாலும் சீனா அதனை பாகிஸ்தானுக்கு வழங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் இந்த சிஸ்டமை வாங்க பாகிஸ்தான் ஆர்வம் காட்டி வருகிறது. தற்போது பாகிஸ்தானும், சவுதி அரேபியாவும் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் சவுதி அரேபியாவிடம் இருந்து பாகிஸ்தான் நிதி பெற்று வாங்கி இதனை வாங்கும் திட்டத்தில் இருக்கலாம் என்றும் சொல்ப்படுகிறது.

இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி

அதேவேளையில் இந்த செய்தி நம் நாட்டுக்கான எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பாகிஸ்தான் விமானப்படை ஏற்கனவே சீனாவிடம் இருந்து 40 J-35A ஸ்டெல்த் போர் விமானங்கள், JF-17 போர் விமானங்களுக்கான தரம் உயர்வு, மேலும் சில J-10C போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை வாங்க முடிவு செய்துள்ளது.

அதேபோல் வான்வழி முன்னெச்சரிக்கை விமானங்களான KJ-500-யையும் வாங்க சீனாவிடம், பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தற்போது நம் நாட்டில் போர் விமானங்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் பாகிஸ்தானின் இந்த செயல் நமக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் தற்போது எச்க்யூ-19பி ரக வான் பாதுகாப்பு சிஸ்டமை சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்க ஆர்வம் காட்டுவது நம் நாட்டுக்கான அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+