இவ்வளவு அடி வாங்கிய பிறகும் திருந்தல.."மீண்டும் போர் வெடிக்கும்!" திமிராக பேசும் பாகிஸ்தான் அமைச்சர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்துள்ளது. அதாவது அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் ஆப்கானிஸ்தான் உடன் முழு வீச்சில் போரை நடத்த வேண்டி இருக்கும் என்றும் தங்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
கடந்த சில காலமாகவே பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே மோதல்கள் தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்கியதால் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டது. அப்போது கத்தார், துருக்கி நாடுகள் மத்தியஸ்தம் செய்தன. கடந்த அக்டோபர் 18-19 தேதிகளில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகே இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

அமைதிப் பேச்சுவார்த்தை
இதற்கிடையே இப்போது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. இஸ்தான்புல்லில் நேற்று சனிக்கிழமை இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போர் வெடிக்கும் என ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை அந்நாட்டின் உள்துறை துணை அமைச்சர் ரஹ்மத்துல்லா முஜிப் தலைமையிலான டீம் இந்த அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறது. மறுபுறம் பாகிஸ்தான் தரப்பில், இரு பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட குழு பங்கேற்றுள்ளது.
மிரட்டல்
இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், "பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஆப்கானிஸ்தானுடன் போரில் ஈடுபடுவதைத் தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை. இருப்பினும், இரு தரப்பினரும் அமைதியை விரும்புவதாகத் தெரிகிறது" என பாகிஸ்தானின் டெய்லி டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலை ஒரு அமைப்பு மேற்பார்வையிடுவதை பாகிஸ்தான் விரும்புவதாகத் தெரிகிறது. அதாவது ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இரு நாடுகளும் அமைதி ஒப்பந்த விதிமுறைகளைப் பின்பற்றுகிறதா என்பதைச் சரிபார்க்க துருக்கி மற்றும் கத்தார் நாடுகளின் இணைத் தலைமையின்கீழ் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என பாகிஸ்தான் விரும்புகிறது.
பாகிஸ்தான் டிமாண்ட்
பாகிஸ்தானின் 'டான்' செய்தி நிறுவனம் மேலும், "ஆப்கான் மண்ணில் இருந்து பாகிஸ்தான் எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்தும் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பின் அச்சுறுத்தலை அகற்ற ஆப்கான் உறுதிமொழிகளைக் கொடுக்க வேண்டும். அதைத் தான் பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.
துராண்ட் கோடு பகுதியில் கடந்த சில வாரங்களாகப் பல மோதல்கள் ஏற்பட்டதால், ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் 9ம் தேதி ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி இந்தியா வந்திருந்த நிலையில், சரியாக அப்போது முதல் நாளிலேயே ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியது. அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானும் அதற்குப் பதிலடி கொடுத்தது.
திட்டம் என்ன!
இது ஒரு பக்கம் இருக்க.. சமீபத்தில் ஆப்கானிஸ்தான் இன்னொரு அதிரடி நடவடிக்கையை எடுத்தது. அதாவது இந்தியா எப்படிச் சிந்து நதி நீர்த் திட்டத்தில் இருந்து விலகியதோ.. அதேபோல ஆப்கானிஸ்தானும் தங்கள் குனார் நதியில் விரைவில் அணைகளைக் கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளது. இது பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரைக் குறைக்கும்.
பொதுவாக சித்ரால் நதி என்று அழைக்கப்படும் இது ஆப்கானிஸ்தானில் குனார் நதி என்றும் அழைக்கப்படுகிறது. இது பாகிஸ்தானின் வடக்குப் பகுதியிலும், கிழக்கு ஆப்கானிஸ்தானிலும் பாயும் 480 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு நதியாகும். இது பாகிஸ்தானின் கில்கிட் பல்டிஸ்தான் மற்றும் சித்ரால் எல்லையில் அமைந்துள்ள சியான்டார் பனிப்பாறையில் உருவாகிறது. இது அரண்டுவில் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து, அங்கு குனார் நதி என்று அழைக்கப்படுகிறது. பின்னர் ஆப்கானிஸ்தானின் நங்காஹர் மாகாணத்தில் உள்ள காபூல் நதியுடன் இணைகிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications