தொழுகை நடத்தாத குற்றத்திற்காக சிறுவன் கை துண்டிப்பு.. பாகிஸ்தான் மதகுரு கைது
லாகூர்: தொழுகை நடத்தவில்லை என்ற குற்றத்திற்காக, 15 வயது சிறுவனின் கரங்களை துண்டிக்க உத்தரவிட்ட மத குரு கைது செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் லாகூர் அருகே உள்ள குஜ்ரஷா முகீம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள மசூதியில் மதகுருவாக இருப்பவர் ஷபீர் அகமது.
நேற்று முன்தினம் மசூதியில் வழக்கமான தொழுகை நடந்தது. அப்போது யார் தொழுகையில் ஈடுபடவில்லை என மதகுரு கேட்டுள்ளார். அவரது கேள்வியை சரியாக புரிந்து கொள்ளாத முகமது அன்வர் என்கிற 15 வயது சிறுவன் கையை உயர்த்தியுள்ளான். ஆனால், தீரவிசாரிக்காமல், அன்வர், தெய்வ நிந்தனை செய்ததாக அறிவிக்கப்பட்டது.
அதற்கு தண்டனையாக சிறுவன் தனது கையை வெட்டி துண்டித்து தன்னிடம் காணிக்கையாக செலுத்த வேண்டும் என மதகுரு உத்தரவிட்டார். அவரது கட்டளையை ஏற்றுக் கொண்ட அச்சிறுவன் வீட்டிற்கு சென்றான். பின்னர் அரிவாளால் தனது ஒரு கையை துண்டாக வெட்டி அதை ஒரு தட்டில் வைத்து மதகுரு ஷபீர் அகமதுவிடம் எடுத்துச் சென்று வழங்கியுள்ளான்.
அந்த சிறுவன் இச்செயலை பெற்றோரும், அண்டை வீட்டினரும் தடுக்காமல், இறைவனுக்கு அடி பணிந்து இந்த செயலை சிறுவன் செய்துவிட்டதாக கொண்டாடியுள்ளனர்.
இதற்கிடையே இச்சம்பவம் போலீஸ் காதுகளுக்கு எட்டியது. சிறுவன் கையை துண்டிக்க தூண்டிய மதகுரு ஷபீர் அகமதுவை தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். மதகுரு மீது சிறுவனின் குடும்பத்தினர் புகார் கொடுக்கவில்லை என்பதோடு, போலீசாருக்கு அவர்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications