வெள்ளைக்கொடி காட்டுகிறாரா இம்ரான் கான்? பிரதமர் மோடியுடன் டிவியில் விவாதம் செய்ய விருப்பமாம்..!
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை தீர்க்க பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சி விவாதம் நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.
பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதிகளில் சுதந்திரமாக மக்கள் வாழ அனுமதிக்க வேண்டுமென பாகிஸ்தான் கூறி வருகிறது.

பாகிஸ்தான் அட்டூழியம்
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலைத் தவிர, 2016 பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதலில் 7 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதற்கும், அதே ஆண்டு உரியில் உள்ள இந்திய இராணுவ முகாம் மீதான தாக்குதலில் 19 வீரர்கள் கொல்லப்பட்டனர், அத்துடன் 2019 புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குமாறு பாகிஸ்தானை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்
உரி பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படையும் வான்வழித் தாக்குதல் நடத்தியது. உரி மற்றும் புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, மேலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்திய ஆயுதப் படைகளின் "முன்கூட்டிய தாக்குதல்கள்" இது என கூறப்பட்டது.

பாகிஸ்தானின் இம்ரான்கான்
"பயங்கரவாதமற்ற சூழ்நிலையில்" மட்டுமே பேச்சுவார்த்தை நடக்கும் என இந்தியா பாகிஸ்தானிடம் பலமுறை கூறியுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை தீர்க்க பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சி விவாதம் நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார். "நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சியில் விவாதம் செய்ய விரும்புகிறேன்," என்று இம்ரான் கான் ரஷ்யா டுடேக்கு அளித்த பேட்டியில் கூறினார், கருத்து வேறுபாடுகளை விவாதத்தின் மூலம் தீர்க்க முடிந்தால், இந்திய துணைக் கண்டத்தில் உள்ள பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.

தொலைக்காட்சி விவாதம்
இந்தியாவும் பாகிஸ்தானும் 75 ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திரம் பெற்றதிலிருந்து மற்றும் மூன்று போர்களை நடத்தியதில் இருந்து உறவில் விரிசல் ஏற்பட்டது. "பயங்கரவாதமும் பேச்சு வார்த்தைகளும் கைகோர்த்து செல்ல முடியாது" என்று சமீப காலங்களில் இந்தியா பாகிஸ்தானுக்கு தெளிவுபடுத்தியுள்ள நிலையில் இம்ரானின் பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியா ஒரு விரோத நாடாக மாறியது, அதனால் அவர்களுடன் வர்த்தகம் குறைந்துவிட்டது, அனைத்து நாடுகளுடனும் வர்த்தக உறவுகளை வைத்திருப்பதே தனது அரசாங்கத்தின் என்று இம்ரான் கான் கூறினார்.












Click it and Unblock the Notifications