தலிபானின் புதிய தலைவரானார் முல்லா! மலாலாவை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டவர்!!
இஸ்லாமாபாத்: குழந்தை போராளி மலாலா யூசுப்சாயை சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட முல்லா பசுலுல்லா தலிபான் இயக்கத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளான்.
பாகிஸ்தானின் வசிரிஸ்தான் மாகாணத்தில் கடந்த வாரம் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தின் தலைவனாக இருந்த ஹகிமுல்லா மசூத் கொல்லப்பட்டான்.

அமெரிக்க உளவுப்படை அலுவலகத்திற்கு குண்டு வைத்ததற்காக அவனது தலைக்கு 50 லட்சம் டாலர்கள் பரிசு அளிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது.
தெரிக் இ தலிபான் என்ற பெயரில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தலிபான்களின் தலைவராக இருந்த ஹகிமுல்லா மசூத் கொல்லப்பட்டதையடுத்து அப்பதவிக்கு, முல்லா பசுலுல்லா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளான். இவன் கடந்த ஆண்டு குழந்தை போராளி மலாலா யூசுப்சாயை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டவன்.
தலிபான் இயக்கத்தின் கமாண்டராக அஸ்மத்துல்லா ஷஹீன் தேர்வு செய்யப்பட்டுள்ளான் என்று பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
தெரிக் இ நிபாஸ் இ ஷரியா இ மொஹமதி என்ற இயக்கத்தின் தலைவனாக இருந்த பசுலுல்லா, பின்னர் ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதியின் பாகிஸ்தான் தலிபானின் கமாண்டராக மாறினான் என்பது குறிப்பிடத் தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications