வளைகுடா நாடுகளில் உள்ள பிச்சைக்காரர்களில் 90% பேர் பாகிஸ்தானியர்கள்! ஷாக் ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: சமீபத்தில் சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈராக் என வளைகுடா நாடுகளிலிருந்து 5,400ம் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டதால் மேற்குறிப்பிட்ட நாடுகள் அவர்களை நாடு கடத்தியுள்ளது என பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கூறியுள்ளார்.

வளைகுடா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் பிச்சை எடுப்பதாக நாடுகடத்தப்பட்டவர்களில் 90% பேர் பாகிஸ்தானியர்களாவார்கள் என நாடாளுமன்றத்தில் வைத்து நக்வி கூறியுள்ளார். பிச்சை எடுப்பதால் பாகிஸ்தானியர்களை நாடு கடத்தும் பணியை வளைகுடா மேற்கொண்டு வருகின்றன.

Pakistan Saudi Arabia IMF

சவுதி அரேபியாவிலிருந்து மட்டும் அதிகபட்சமாக 4,850 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். ஈராக்கிலிருந்து 247 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 58 பாகிஸ்தானியர்களும், பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டதற்காக நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். பிச்சை எடுப்பதை இவர்கள் தொழில் முறையாக செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

பாகிஸ்தானியர்கள் ஹாஜ் போன்ற புனித யாத்திரை விசா எடுத்து வெளிநாடுகளுக்கு போகிறார்கள். அங்கு இந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள். இது குறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறுகையில், "2.2 கோடி பாகிஸ்தானியர்கள் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இது ரூ.3.3 லட்சம் கோடி அளவிளான முறைகேடான பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறது. இந்த பிரச்சினை காரணமாக, சாதாரண பாகிஸ்தானியர்களுக்கு வெளிநாடுகளில் வேலையும் அதற்கான விசாவும் கிடைப்பது கடினமாகி வருகிறது" என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அரசு நாடாளுமன்றத்தில் வைத்து, இப்பிரச்சனையை ஒப்புக்கொண்டிருப்பது இது முதல்முறை கிடையாது. இப்போது பிரதமராக இருக்கும் ஷெபாஷ் ஷெரிப், முன்னர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்திலேயே இந்த பிரச்சனை எழுந்திருந்தது. அதை அவர் ஒப்புக்கொண்டிருந்தார்.

இந்த பிரச்சனை குறித்து இந்தியாவும் தனது கவலையை தெரிவித்திருந்தது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானை பிச்சைக்கார நாடு என்று வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார். தீவிரவாத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அந்நாட்டுக்கு $1 பில்லியன் உதவித் தொகையை சமீபத்தில் ஐஎம்எஃப் வழங்கியிருந்தது. இந்த நிதி விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, ராஜ்நாத் சிங்கின் விமர்சனம் வந்திருந்தது.

பிச்சை எடுக்கும் தொழிலில் பாகிஸ்தானியர்கள் அதிக அளவில் ஈடுபடுவது சோஷியல் மீடியாக்களிலும் விமர்சனங்களை தூண்டியுள்ளது. "பாகிஸ்தானிய பிச்சைக்காரர்கள், ஒரு தோல்வியுற்ற அரசின் உண்மையான வணிக மாதிரி" என்று கூறியுள்ளனர். அதேபோல, "இப்போதுதான் பாகிஸ்தான் சிறந்த ஏற்றுமதியாளராக தெரிகிறது" என்று விமர்சித்து வருகிறார்கள்.

பிச்சை எடுக்கும் தொழில் பாகிஸ்தானியர்களை எந்த அளவுக்கு சீரழித்துள்ளது என்பதற்கு சமீபத்திய யூடியூப் வீடியோ ஒன்றை உதாரணமாக சொல்லலாம். பாகிஸ்தானிய யூடியூபர் சையத் பாசித் அலிதான் இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். மருத்துவரான இளம்பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணமானது. கோடிக்கணக்கில் மதிப்பு கொண்ட பெரிய பங்களாவை கொண்ட பணக்காரரைதான் இவர் திருமணம் செய்திருந்தார். இந்த பங்களா கணவரின் தந்தைக்கு சொந்தமானது.

திருமணமாகி ஏறத்தாழ 5 மாதங்கள் ஆன நிலையில், பெரிய பங்களா, எஸ்யூவி கார், உள்ளிட்டவை எல்லாம் பிச்சை எடுத்து அதில் உருவாக்கப்பட்டது என மருத்துவர் கண்டுபிடித்துள்ளார். இதனையடுத்து திருமண உறவை உதரிவிட்டு, மருத்துவ பணியை முழு நேரமாக மேற்கொண்டு வருகிறார். இதுபோன்று பல சம்பவங்களுக்கு பிச்சை எடுக்கும் தொழில் பின்னால் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+