"பாலஸ்தீன அரசை ஆதரிக்கிறோம்.." நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து நாடுகளின் முடிவு ஏன் முக்கியமானது?
லண்டன்: காஸாவில் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து ஆகியவை மே 28 அன்று பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக அதிரடியாக அறிவித்தன.
ஸ்வீடன், பல்கேரியா, சைப்ரஸ், செக் குடியரசு, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, மால்டா, போலந்து மற்றும் ருமேனியாவைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தை அங்கீகரித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நாட்டு பட்டியலில் இவை இப்போது இணைந்துள்ளன.

முக்கியத்துவம்: இந்த அங்கீகாரம் ஒருவகையில் பாலஸ்தீன மக்களுக்கு முக்கியமானது. இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தொடர்பான சர்வதேச ராஜதந்திரத்தின் நகர்வில் மைல் கல் என்று சொல்லலாம். அமெரிக்கா தலைமையிலான வழக்கமான சமாதான முயற்சிகளில் இருந்து விலகியுள்ளன இந்த நாடுகள். பாலஸ்தீன பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதாக அதிருப்தி நிலவுவதே இதற்கு காரணம்.
காஸாவில் போர்நிறுத்தத்திற்கான அரபு ஆதரவை வலுப்படுத்துவதையும் இந்த ஆதரவுக்கரம் வலுப்படுத்துகிறது. இது பாலஸ்தீனிய அரசமைப்பை நோக்கிய புதிய ஒரு பாதைக்கான நம்பிக்கையை அதிகரிக்கிறது.
உடனடி விளைவுகள்: பூகோள அடிப்படையில், குறிப்பாக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், இந்த அங்கீகாரத்தின் தாக்கம் குறைவாக இருக்கும். பாலஸ்தீனியர்கள் எதிர்கொள்ளும் விஷயங்கள் ஒரே இரவில் மாற வாய்ப்பில்லை.
நீண்டகால தாக்கங்கள்: இந்த நாடுகளின் ஆதரவு, பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை அடிக்கோடிட்டு சர்வதேச சமூகத்திற்கு காண்பிக்கிறது. பாலஸ்தீன சிவில் சமூகத்திற்கு சர்வதேச ஆதரவை உறுதிப்படுத்த இந்த நாடுகளின் ஆதரவு ஊக்கம் தரலாம்.
இஸ்ரேலிய அரசாங்கத்தின் மீதான சர்வதேச அழுத்தத்தை இந்த ஆதரவு அதிகரிக்கிறது. இஸ்ரேலிய அரசாங்கத்தை தனிமைப்படுத்துவதை இந்த ஆதரவு மறைமுகமாக வலியுறுத்துகிறது என்றும் பார்க்கலாம்.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் ஒரு முக்கியமான கட்டத்தை இந்த ஆதரவு குறிக்கிறது. இரு நாடுகளின் தீர்வுக்கான அதிகரித்து வரும் ஆதரவைக் காட்டுகிறது. பேச்சுவார்த்தை மற்றும் அமைதி முயற்சிகளுக்கான அவசரத் தேவையைும் எடுத்துக்காட்டுகிறது.
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான ஐரோப்பிய நாடுகளின் முடிவு, இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் ஒரு திருப்புமுனையாகும். இது இரு நாடுகளின் தீர்வுக்கான சர்வதேச ஆதரவை வலுப்படுத்துவதற்கும் மற்றும் புதிய அமைதி முயற்சிகளுக்கும் வழிவகுக்கும் என்றும் இது நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications