Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இரக்கமே இல்லை.." கெமிக்கல் ஊற்றி பாலியல் வன்முறை.. இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீன கைதிகளுக்கு கொடூரம்

Subscribe to Oneindia Tamil

பாலஸ்தீன்: இஸ்ரேல் சிறைகளில் பல மாதங்கள் அவதிப்பட்ட பாலஸ்தீன சிறைவாசிகள் தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் குறித்து பகீர் தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். தங்களை பாலியல் செயல்களில் ஈடுபட வலியுறுத்தியதாகவும் கெமிக்கல் ஊற்றித் துன்புறுத்தியதாகவும் அவர்கள் சொன்ன பல தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடர்ந்து வருகிறது. இடையில் இரு தரப்பிற்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டு இருந்தது. இருப்பினும், இப்போது போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து மீண்டும் இகு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேநேரம் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவதற்கு முன்பு இரு தரப்பும் தங்கள் வசம் இருந்த பலரை விடுவித்தனர்.

Palestinian Hostages Allege Abuse by Israeli Army Shocking Details Emerge

பாலஸ்தீனர்கள்

அதன் ஒரு பகுதியாக இஸ்ரேல் ராணுவம் ஐந்து பாலஸ்தீன கைதிகளை விடுவித்து இருந்தது. இதற்கிடையே இஸ்ரேல் ராணுவத்தின் பிடியில் இருந்தபோது தங்களை எந்தளவுக்கு மிக மோசமாக மனிதாபிமானமற்ற முறையில் நடத்தினர் என்பது குறித்த விவரங்களை அந்த ஆண்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடங்கிய சில மாதங்களில் இவர்களை இஸ்ரேல் கைது செய்திருக்கிறது. இஸ்ரேலின் சட்டவிரோத போராளிகள் சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சட்டத்தின் கீழ் இஸ்ரேலால் யாரை வேண்டுமானாலும் கைது செய்ய முடியும். மேலும், எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லாமல் காலவரையின்றி சிறையிலும் வைத்திருக்க முடியும்.. இந்தச் சட்டத்தின் கீழ் தான் இவர்களை மாதக் கணக்கில் இஸ்ரேல் ராணுவம் எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லாமல் சிறை வைத்திருக்கிறது.

மிக மோசம்

சர்வதேச ஊடகத்தினர் இவர்களுடன் பேசியபோது அவர்கள் பல அதிர்ச்சி சம்பவங்களை விவரித்தனர். ஐந்து பேரையும் ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக்கியுள்ளனர். மேலும், கண்கள் கட்டி, விலங்கு போட்டு மிக மோசமாக தங்களை இஸ்ரேல் ராணுவம் அடித்துத் தாக்கியாகத் தெரிவித்தனர். மேலும், ஒரு கட்டத்தில் மின்சார ஷாக் மூலமும் நாய்களை ஏவிவிட்டும் தாங்கள் சித்திரவதை செய்ததாகப் பரபர கருத்துகளைக் கூறியுள்ளனர்.

இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட முகமது அபு தவிலே இது குறித்துக் கூறுகையில் "என் மீது கெமிக்கலை போட்டனர். நொடியும் யோசிக்காமல் தீ கூட வைத்துவிட்டனர். பிறகு தீயை அணைக்கிறேன் எனச் சொல்லிக் கொண்டு அவர்கள் அனைவரும் என்னை மாறி மாறி மிருகத்தைப் போல அடித்துத் துன்புறுத்தினர்" என்றார். மற்றொரு நாள் தன் மீது இன்னொரு கெமிக்கலை ஊற்றியதாகவும் அதை நீக்கவே ஒன்றரை நாள் ஆனதாகவும் தவிலே கூறுகிறார்.

இரக்கமே இல்லை

அப்துல் கரீம் முஷ்தாஹா என்ற மற்றொரு நபர் கூறுகையில், "பாலஸ்தீனியர்கள் மீது அவர்கள் இரக்கமே காட்ட மாட்டார்கள். எங்களைக் கட்டி வைத்து மிருகத்தை அடித்தது போல அடித்தனர். ஏதோ நாங்கள் தான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை போலக் காட்டுமிரண்டி தனமாக அடித்தனர். யாரும் எங்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்கவில்லை. பல நேரங்களில் மருத்துவ உதவி கூட தரவில்லை" என்றார்.

இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மற்றொரு நபர் கூறும் தகவல்கள் பேரிடியைத் தருவதாக இருக்கிறது. அதாவது இஸ்ரேல் வீரர்கள் பாலஸ்தீனர்கள் மீது எச்சைத் துப்பி, காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் திட்டுவார்களாம். மேலும், எங்கள் குழந்தைகளுக்கு என்ன செய்தீர்களோ, அதை நாங்கள் உங்கள் குழந்தைகளுக்குச் செய்வோம் என்றும் மிரட்டுவார்களாம்.

பாலியல் செயல்

அவர் மேலும் கூறுகையில், "மருத்துவ உதவி எதுவுமே கிடைக்காது. இதனால் சிறையிலேயே வைத்துப் பல பாலஸ்தீனர்கள் உயிரை விட்டனர். சில நேரம் பாலஸ்தீன இளைஞர்களின் ஆடைகளைக் கழற்றச் சொல்லி பாலியல் செயல்களிலும் ஈடுபடச் சொல்வார்கள். இதை ஒரு தண்டனையாகவே அவர்கள் கொடுப்பார்கள். மேலும், இஸ்ரேல் வீரர்கள் தலைகள் மற்றும் கண்கள், காதுகள் போன்ற சென்சிடிவ் பகுதிகளைக் குறிவைத்துத் தாக்கினர்" என்றும் குறிப்பிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+