For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காற்று மாசுபடுதலை தவிர்க்க பாரீஸில் அரசு போக்குவரத்து 'ப்ரீ'..!

Google Oneindia Tamil News

பாரீஸ்: பாரீஸில் பொதுப் போக்குவரத்து இலவசம் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பாரீஸ் மற்றும் அதன் புறநகரங்களில் வளி மண்டலம் மிகவும் மாசடைந்துள்ளது.

இதன் காரணமாக அந்த நகரம் மாசுபடுதலின் உச்சத்தை எட்டியுள்ளது.

கடும் குளிர்:

கடந்த சில நாட்களாக ஃப்ரான்சில் ஏற்பட்டுள்ள திடீர் குளிரினால் பாரீஸ் முழுவதும் காற்று இல்லாமல் போனது.

நச்சுப் புகை:

மேலும், வாகனங்கள் வெளியேற்றும் நச்சு புகையும், குளிரைப் போக்கிக் கொள்ள மக்கள் வீடுகளில் பயன்படுத்தும் ரேடியேட்டர் கருவிகளும் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றது.

மூன்று நாட்கள் இலவசம்:

இதையடுத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வாகனங்களின் புகையை தவிர்க்கவும் அங்கு மூன்று நாளைக்கு பொதுப்போக்குவரத்து முற்றிலும் இலவசமாக்கப்பட்டுள்ளது.

அரசு கோரிக்கை:

பாரீஸ் மற்றும் அதன் அருகிலுள்ள நகரங்களில் வசிப்பவர்கள் இந்த பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று நகர போக்குவரத்து அமைப்புத் தலைவர் ஜீன் பால் ஹூச்சோன் கேட்டுக் கொண்டுள்ளார்.

லாரீஸ் ஸ்டாப் ப்ளீஸ்:

லாரிகள் போன்ற வர்த்தக வாகனங்களை நிறுத்தி வைக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

English summary
Paris government announced 3 days free transportation for control the air pollution. people are requested to use this free transportation by the government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X