பாரீஸ் தாக்குதலில் தேடப்படும் குற்றவாளி அப்துஸலாம் பெல்ஜியத்தில் கைது?
ப்ருசெல்ஸ்: பாரீஸ் தாக்குதல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சாலா அப்துஸலாம் பெல்ஜியம் தலைநகர் ப்ருசெல்ஸில் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 129 பேர் பலியாகினர், 532 பேர் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக பெல்ஜியத்தைச் சேர்ந்த சாலா அப்துஸலாம்(26) அறிவிக்கப்பட்டார்.

தாக்குதல் நடந்த மறுநாள் அவர் சென்ற காரை போலீசார் பெல்ஜியம் எல்லையில் நிறுத்தி சோதனை செய்துவிட்டு அவரை விட்டுவிட்டனர். இந்நிலையில் பெல்ஜியம் தலைநகர் ப்ருசெல்ஸின் புறநகர் பகுதியான மொலென்பீக்கில் போலீசார், கமாண்டோக்கள் சில வீடுகளை சுற்றி வளைத்து சோதனை நடத்தியுள்ளனர்.
அந்த சோதனையின்போது அப்துஸலாம் கைது செய்யப்பட்டுள்ளதாக தனியார் ரேடியோவான ஆர்டிஎல் தெரிவித்துள்ளது. ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை என பெல்ஜியத்தில் உள்ள பிரெஞ்ச் சமூகத்தினர் நடத்தும் ஆர்டிபிஎப் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
மொலென்பீக் மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறிய முஸ்லீம்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மொலென்பீக்கில் பாரீஸ் தாக்குதல்கள் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தபோதிலும் அப்துஸலாம் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications