For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அசைவம் சாப்பிடுவதை கண்டித்து லண்டனில் பீட்டா ஆதரவாளர்கள் நிர்வாண போராட்டம்

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: உலக சைவ உணவாளர் தினத்தையொட்டி லண்டனில் பீட்டா ஆர்வலர்கள் நிர்வாணமாக போராட்டம் நடத்தினர்.

நவம்பர் மாதம் 1ம் தேதி உலக சைவ உணவாளர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சைவ உணவாளர் தினத்தன்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பீட்டா ஆர்வலர்கள் ஒன்று கூடி அசைவம் சாப்பிடுவதை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நிர்வாணமாக நின்று கொண்டு அசைவத்திற்கு எதிராக கோஷமிட்டதுடன், கையில் பேனர்களை பிடித்திருந்தனர். போராட்டக்காரர்கள் தங்கள் உடலில் ரத்தத்தை குறிக்கும் வகையில் சிவப்பு நிற சாயத்தை ஆங்காங்கே பூசியிருந்தனர்.

கறிக்காக ஒரு ஆண்டில் 10 லட்சம் விலங்குகள் கொல்லப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். டிரபால்கர் ஸ்கொயரில் நடந்த இந்த போராட்டம் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. போராட்டத்தில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் சாலையில் வரிசையாக படுத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பீட்டாவுக்காக போட்டோவுக்கு போஸ் கொடுப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஆடையின்றி நிர்வாணமாகத் தான் போஸ் கொடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
PETA supporters hold a protest baring it all in Trafalgar Square against the killing of animals on World Vegan Day in London on November 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X