நாய்க்கு ஐந்தறிவுனு யாருங்க சொன்னா. இந்த ரெண்டு வீடியோவைப் பார்த்தா உங்களுக்கே கண்ணு வேர்க்கும்!
துருக்கியில் காயம்பட்ட தெரு நாய்க்கு மருந்தாளர் ஒரு அக்கறையுடன் சிகிச்சை அளிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
இஸ்தான்புல்: காயம்பட்ட தெரு நாய் ஒன்று தானாகவே சென்று மெடிக்கல் ஷாப்பில் மருந்து கேட்ட வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள ஒரு மருந்துக்கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்தால் யாராலும் உச்சுக்கொட்டாமல் இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு அற்புதமான காட்சி அதில் பதிவாகி இருக்கிறது.
முதல் வீடியோவில், மருந்துக்கடையின் வாசலில் ஒரு தெருநாய் வந்து நின்று பாவமாகக் கடையை பார்க்கிறது.
|
காயம் பட்ட நாய்:
இதைப்பார்க்கும் கடையின் உரிமையாளர் செங்கிஸ், நாயை உள்ளே அழைத்து ஒரு மெத்தையில் படுக்க வைக்கிறார். ஆனால் அந்த நாய் மீண்டும் கதவருகே சென்று நிற்கிறது. இதையடுத்து அந்த நாயிடம் சென்று ஏதாவது பிரச்சினையா என அக்கறையுடன் விசாரிக்கிறார் கடைகாரர். அப்போது தான் தெரிகிறது அந்த காயனின் காலில் அடிப்பட்டு காயம் ஏற்பட்டிருப்பது.
|
2வது வீடியோ:
இரண்டாவது வீடியோவில், நாயின் காயத்துக்கு மருந்து போட்டு, சிகிச்சை அளிக்கிறார் செங்கிஸ். கட்டுப்போட்டு முடித்தபிறகு, தரையில் படுத்துக்கொண்டு தனது காலைத் தூக்கி நன்றி தெரிவிக்கிறது அந்த நாய். காண்போரை நெகிழச்செய்யும் இந்த வீடியோக்கள் தான் சமூக வலைதளங்களில் இப்போது டிரெண்டிங் ஹிட்.

குவியும் லைக்ஸ்:
இந்த வீடியோக்களை பார்த்துவிட்டு செங்கிஸை பாராட்டாத ஆளே இல்லை. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்களை அள்ளிக்குவித்திருக்கிறது செங்கிசின் மனிதாபிமான வீடியோ. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பார்ப்பவர்கள் உச்சுகொட்டி, சலாகித்து எமோட்டிகான் போட்டு வருகிறார்கள்.

என்னா அறிவு:
தனக்கு அடிப்பட்ட உடன் சரியாக மருந்துக்கடையை தேடி வந்த அந்த நாயின் அறிவை பாராட்டுவதா, இல்லை அந்த நாய்க்கு அக்கறையுடன் சிகிச்சை அளித்த செங்கிசின் மனிதாபிமானத்தை நினைத்து நெகிழ்வதாக, ஆனந்த கண்ணீர் சிந்துகின்றனர் நெட்டிசன்ஸ். நமக்கும் தாங்க... அந்த வீடியோவை பார்த்து கண்ணு வேர்த்துடிச்சு.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications