தங்கையை கவ்விய முதலை; பயப்படாமல் துணிந்து போராடி மீட்ட 15 வயது அண்ணன்-பிலிப்பைன்ஸில் திகில் சம்பவம்
மணிலா: ஒரு சிற்றோடையில் மூங்கில் பாலத்தில் நடந்து சென்றபோது தங்கையின் காலை முதலைபிடித்து இழுத்த நிலையில் துணிச்சலுடன் போராடி 12 வயது தங்கையை 15 வயது அண்ணன் காப்பற்றி உள்ளான். இந்த சம்பவம் பிலிப்பைன்ஸில் நடந்துள்ளது.
15 வயது அண்ணன் ஹசிம், தனது 12 வயது தங்கையான ஹைனாலிசா ஜோஸ்நபி உடன் கடந்த வெள்ளிக்கிழமை தெற்கு பிலிப்பைன்ஸின் பலவான் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தான்.
அங்கே சிறிய ஓடையின் மீது இருந்து மூங்கில் பாலத்தில் ஏறிய அண்ணன் தங்கை இருவரும் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

கவ்விய முதலை
ஹசிம் பாலத்தை கடந்து கரையேறி அந்த பகுதிக்கு சென்றுவிட்டான். ஆனால் தங்கையான ஹைனா கரை திரும்பவில்லை. ஹசிம் தங்கை எங்கே என்று திரும்பி பார்த்த போது பாலத்தில் 14 அடி நீள முதலை ஒன்று ஹைனாவின் காலைக் கவ்வி இழுத்துக் கொண்டிருந்தது. . பாலத்தில் தொங்கியபடி துடித்திருக்கிறார் ஹைனா.

கல்லை வீசினான்
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஹாசிம் பயம் கொள்ளாமல், பெரிய பெரிய கற்களை எடுத்து முதலையின் மேல் ஆவேசமாக வீசியுள்ளான். அப்படியே முதலையின் அருகில் சென்று ஹைனாவை கரைப்பக்கம் இழுத்து மீட்டான்.

ஹாசிம் பேட்டி
காலில் பலத்த காயம் அடைந்த ஹைனா, தற்போது பாலபக் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பம் குறித்து சிறுவன் ஹசிம் கூறுகையில், என் தங்கை அவளாகவே விழுந்து விட்டாள் என்று தான், நான் முதலில் நினைத்தேன். ஆனால் முதலை இழுத்துச்சென்றது தெரிந்தது. சட்டென வேகமாக சென்று காப்பாற்றினேன் என்றார்.

ஹைனா பேட்டி
இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில் இருந்து விடுபடாத ஹைனா, முதலை என்னை கவ்வியதும் நான் காத்தினேன். ஹாசிம் எனக்கு உதவினார். அண்ணன் பெரிய பாறைகளை அதன் மீது எறிந்து என்னை முதலையிடம் இருந்து மீட்டார். என் அண்ணாவை நான் மிகவும் நேசிக்கிறேன். என் உயிரை காப்பாற்றிவிட்டார் என்று தெரிவித்தார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications