அந்த குழந்தையின் கடைசி மூச்சு சத்தம் இப்போதும் கேட்கிறது.. சிரியா போரின் நேரடி வாக்குமூலம்
Recommended Video

டமாஸ்கஸ்: சிரியாவில் நடக்கும் போர் பற்றி முகமது பத்ரா என்று புகைப்படக்காரர் பேசி இருக்கிறார். அங்கு என்ன மாதிரியான கொடுமைகள் நடக்கிறது என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.
இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் இதுவரை 800 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
|
யார் இவர்
முகமது பத்ரா ஐரோப்பாவின் பிரஸ் போட்டோ என்ற நிறுவனத்திற்காக வேலை செய்து வருகிறார். சிரியா போர் உச்சமடைந்ததில் இருந்து அவர் அங்கு புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார். வெளியாகும் முக்கியமான போர் புகைப்படங்களில் 70 சதவிகித புகைப்படங்கள் இவர் எடுத்ததுதான்.
|
பேட்டி
அங்கு நடக்கும் அநியாயங்கள் குறித்து இவர் தற்போது பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்துள்ளார். இதில் பல அதிர்ச்சி அளிக்க கூடிய தகவல்களை அளித்துள்ளார். அவரால் அங்கு பல முறை சரியாக வேலையே செய்ய முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
|
கெமிக்கல் குண்டுகள்
அவர் ''இங்கு கெமிக்கல் குண்டுகள் அதிகமாக போடப்படுகிறது. உடலில் எந்த காயமும் இல்லாமல் வருவார்கள். ஆனால் 10 நிமிடத்தில் மரணம் அடைந்து விடுவார்கள். அவர்கள் மூச்சுவிடும் சத்தம் இப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கிறது.'' என்றுள்ளார்.
|
மோசமான வாசனை
மேலும் ''அங்கு மோசமான வாசனை ஒன்று வீசும். குளியல் அறையை குளோரின் போட்டு கழுவியபின் வரக்கூடிய வாசனை. அவர்கள் குளோரின் குண்டுகளை பயன்படுத்துகிறார்கள். பிறரிடம் இருந்து வரும் அந்த வாசனையே என்னை வேலை செய்ய விடவில்லை. அப்படி இருக்கும் போது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி கஷ்டப்பட்டு இருப்பார்கள்'' என்றுள்ளார்.
|
குற்றம்
அதேபோல் ''எல்லா நாடுகளும் பெரிய குற்றம் செய்கிறார்கள். இதில் எல்லோருக்கும் பெரிய பங்கு இருக்கிறது. அமைதியாக இருக்கும் மக்களுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. இங்கு குழந்தைகள் தான் அதிகமாக செத்து மடிகிறார்கள்'' என்று மிகவும் கோபமாக பேசி இருக்கிறார்.

அந்த குழந்தை
முக்கியமாக ''நான் உள்ளே நுழைந்த போது அங்கு மூன்று குழந்தைகள் மூச்சு வாங்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். எனக்கு அருகில்தான் அவர்கள் உட்கார்ந்து இருந்தார்கள். என் கண் முன்னே அதில் ஒரு குழந்தை மரணம் அடைந்தது. அந்த கடைசி மூச்சுகாற்றை என்னால் எப்போதும் மறக்க முடியாது'' என்று பேசி இருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications