காட்டு தீயை அணைக்க முயன்ற விமானம்.. மலையில் மோதி விபத்து.. பறிபோன 3 உயிர்கள்.. கிரீஸில் சோகம்
ஏதென்ஸ்: கிரேக்க நாட்டில் காட்டு தீ கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், விமானம் மூலம் அதனை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு தீயணைப்பு துறையினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கிரேக்கின் எவியா தீவில் உள்ள கரிஸ்டோஸ் பகுதியில் கடந்த ஒரு வாரமாக காட்டு தீ பரவி வருகிறது. தீவில் எராளமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதனை பாதுகாக்க வேண்டும். மட்டுமல்லாது இங்கு ஏற்பட்டுள்ள தீ பக்கத்து தீவில் உள்ளவர்களுக்கு கடுமையான சுவாச பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதனை அணைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தீ கட்டுக்குள் வரவில்லை.

தற்போது வரை தீவின் 10 சதவிகித நிலப்பரப்பு தீயால் முழுவதுமாக எரிக்கப்பட்டுள்ளது. காற்று பலமாக வீசி வருவதால் தீ மேலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், விமானம் மூலம் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கலாம் என்று தீயணைப்பு துறையினர் முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து 34 மற்றும் 27 வயதான இரண்டு விமானிகள் CL-215 விமானம் மூலம் இப்பணியை மேற்கொண்டனர். இந்த வகை விமானங்கள் காட்டு தீயை அணைக்கவும், கடல்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபடவும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் சிறப்பு அம்சம் என்னவெனில், குறைவான வேகத்தில் கூட இதனால் பறக்க முடியும் என்பதுதான். அதேபோல அதிகபட்சமாக 348 கி.மீ வேகத்தில் பறக்கும். மேலும் எவ்வளவு பலத்த காற்று வீசினாலும் கூட இந்த விமானத்தால் நிலையாக பறக்க முடியும். கனடா உருவாக்கிய இந்த விமானம் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் பயன்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் வழக்கம் போல இந்த விமானிகளை CL-215ஐ எடுத்துக்கொண்டு தண்ணீரை சேகரித்துள்ளனர்.
பின்னர் காட்டு பகுதியில் அதனை ஊற்றியுள்ளனர். இதனையடுத்து எதிரில் உள்ள மலையில் மோதாமல் இருப்பதற்காக விமானத்தை வலது பக்கம் திருப்பிய அவர்கள் மலையில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த மலையில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த ஒரு முதியவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்திற்கு முக்கிய காரணம் விமானம் ஸ்டாலிங் ஆனதுதான் என்று முதற்கட்டமாக தெரிய வந்துள்ளது. தற்போது இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது வரை இந்த தீவின் மலை பகுதியிலிருந்து சுமார் 60 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 2000 பேர் சுற்றுலா பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications