என்னை ஜிம்பாப்வேவுக்கு நாடு கடத்திடுங்க... இந்தோனேசியா போலீசிடம் கெஞ்சிய சோட்டா ராஜன்
பாலி: இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான நிழல் உலக தாதா சோட்டா ராஜனை இந்தோனேசியா போலீசார் கைது செய்த போது தம்மை ஜிம்பாப்வேவுக்கு நாடு கடத்தி விடுமாறு கெஞ்சியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவால் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேடப்பட்டு வந்த மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன், இந்தோனேசியா நாட்டின் பாலி தீவில் கடந்த ஞாயிறன்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்தியாவிடம் அவர் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளார்.

இதனிடையே தாம் கைது செய்யப்பட்ட போது தம்மை ஜிம்பாப்வேவுக்கு தப்பி செல்ல அனுமதிக்குமாறு போலீசாரிடம் சோட்டா ராஜன் கெஞ்சியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து பாலி தீவு போலீஸ் அதிகாரி மேஜர் ரெய்ன்கார்ட் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
சோட்டா ராஜனை நாங்கள் கைது செய்து விசாரணை நடத்திக் கொண்டிருந்தோம். முதலில் தாம் சோட்டா ராஜன் இல்லை என்று அவர் மறுத்து வந்தார். தமது பாஸ்போர்ட்டை காட்டி தன்னை மோகன் குமார் எனக் கூறிவந்தார்.
ஆனால் கடைசியாக தாம் சோட்டா ராஜன்தான் என்பதை அவர் ஒப்புக் கொண்டார். இந்தியாவில் என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. ஆகையால் என்னை ஜிம்பாப்வேவுக்கு நாடு கடத்தி விடுங்கள் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார். ஆனால் அவரது வேண்டுகோளை நாங்கள் ஏற்கவில்லை.
இவ்வாறு மேஜர் ரெய்ன்கார்ட் கூறியுள்ளார்.
இதனிடையே சி.பி.ஐ. இயக்குநர் அனில் சின்ஹா கூறுகையில், சோட்டா ராஜனின் நடமாட்டம் குறித்து ஆஸ்திரேலியா, இந்தோனேசியா போலீசாருக்கு நாங்கள் தகவல் தெரிவித்துக் கொண்டிருந்தோம். தற்போது சோட்டா ராஜனை இந்தியாவுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications