வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் உறுதி ... சிங்கப்பூர் பிரதமர்
டோக்கியோ: வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சிங்கப்பூரில் பாதுகாப்புடன் வசிக்கவும், தொழில் பார்க்கவும் சிங்கப்பூர் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் கூறியுள்ளார்.
டோக்கியோ வந்திருந்த அவர் இதுகுறித்து கூறுகையில், சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 10 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களது தொழில் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்புக்கு சிங்கப்பூர் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவர்கள் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் அரசு கருதுகிறது.
எந்த ஒரு வெளிநாட்டுத் தொழிலாளரையும் அநீதியாக, மோசமாக நடத்த நாங்கள் திட்டமிட்டிருக்கவில்லை, விரும்பவில்லை.

அவர்கள் நல்லமுறையில் நடத்தப்படுவார்கள். சரியான ஊதியம் பெற வகை செய்யப்படுவார்கள். அவர்களது பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படும். அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும். அவர்களுக்கு முழுமையான -சட்டப் பாதுகாப்பு கிடைக்கும் என்றார் அவர்.
லிட்டில் இந்தியா பகுதியில் சமீபத்தில் நடந்த திடீர் கலவரத்தைத் தொடர்ந்து சிங்கப்பூரில் அசாதாரண நிலை நிலவுகிறது. இந்த நிலையில்தான் சிங்கப்பூர் பிரதமர் இப்படிக் கூறியுள்ளார்.
இதற்கிடையே சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் கே.சண்முகம், வெளிநாட்டவர் தங்கியிருக்கும் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று அவர்களிடம் கலந்துரையாடினார்.












Click it and Unblock the Notifications