பூடானுக்கு ரூ.10,000 கோடி நிதி.. மழை நிவாரணம் தரவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு நடுவே மோடி அறிவிப்பு
திம்பு: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக பூடான் சென்றுள்ள நிலையில் அந்நாட்டுக்கு ரூ.10,000 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மழை நிவாரண நிதியை போதிய அளவு மத்திய அரசு தரவில்லை என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் இந்த அறிவிப்பை பிரதமர் மோடி செய்துள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக பூடான் உள்ளது. இந்த நாடு அளவில் மிகவும் சிறியது. இந்தியாவை போல் சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இதனா்ல பூடானுக்கும், இந்தியாவுக்கும் இடையே நல்ல உறவு இருப்பது என்பது மிகவும் முக்கியமானதாகும்.

பொதுவாகவே இந்தியா-பூடான் இடையேயான உறவு என்பது நன்றாகவே உள்ளது. இந்தியா சார்பில் பூடானுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனை சீனா விரும்புவது இல்லை. மேலும் பூடானின் டோக்லாம் பீடபூமியை சீனா கைப்பற்ற துடித்து வருகிறது. தற்போது இந்த பகுதி இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் சீனாவால் எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது.
இதற்கிடையே தான் பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக பூடான் செல்ல திட்டமிட்டு இருந்தார். இது அரசு முறை பயணமாக திட்டமிடப்பட்டது. ஆனால் மோசமான வானிலை காரணமாக திட்டமிட்டப்படி பிரதமர் மோடியால் நேற்று பூடான் செல்ல முடியவில்லை. இதையடுத்து இன்று பிரதமர் மோடி பூடான் புறப்பட்டு சென்றார்.
சிறப்பு விமானத்தில் பிரதமர் மோடி பூடானின் பரோ சர்வதேச விமான நிலையம் சென்று இறங்கினார். அங்கு அவருக்கு வரேவேற்பு அளிக்கப்பட்டது. இருநாடுகள் இடையேயான உறவை வலுப்படுத்தவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் பிரதமர் மோடி பூடான் சென்றுள்ளார். இந்தியா உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
குறிப்பாக திம்புவில் இந்திய அரசின் உதவியுடன் கட்டப்பட்டுள்ள அதிநவீன தாய் மற்றும் குழந்தைகளின் சிகிச்சைக்கான மருத்துவமனையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இத்தகைய சூழலில் தான் பிரதமர் மோடி ரூ.10 ஆயிரம் கோடி நிதியுதவியை பூடானுக்கு அறிவித்தார். இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் பூடானில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இந்தியா சார்பில் இந்த ரூ.10,000 கோடி நிதியுதவி ஒவ்வொரு கட்டமாக வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் பல மாநிலங்கள் மத்திய அரசு போதிய நிதியை விடுவிக்கவில்லை என குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக மழை நிவாரண நிதியை மத்திய அரசு தரவில்லை என தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில் பிரதமர் மோடி பூடானுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications